உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றொடர்புங்

சிவஞான போத ஆராய்ச்சி

211

கூறப்பட்டதாகலின், இவர்க்கு மாயை இல்லையென்றல் மாறுகோளுரை போலுமெனின்; அவர்க்கு மாயை இல்லை யென்றது சுத்தமும் அசுத்தமும் விரவின இம் மிச்சிர தத்துவங்களை அன்று; மற்றுச் சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களான் மாறிமாறி உயிர்களின் அறிவை மயக்குவதாய், அசுத்த மாயா தத்துவங்களின்கீழ் உளதாகிய பிரகிருதி மாயையையே யாமென் றுணர்ந்து கொள்க. பிரகிருதிக்கு மேலுள்ள தத்துவங்களில் வைகுவா ரான பிரளயா கலர்க்கு முக்குண மயக்கம் இன்மையின், அவரறிவு தூயதாய் விளங்குதலானும், அது தூயதாகவே அது பற்றி நிகழும் வினைகளுந் தூயவாய் நிகழ்தலானும், அவ்வினை தூயவாகவே அவரைப் பற்றிய ஆணவமல வலியுஞ் சுருங்குதலானும், அவர் பிரகிருதி மாயையின் கீழிருக்கும் னைச் சகலரைப் போல் மும்மலவலி மிக்கு டையரல்லராய், இறைவன் றிருவருளை நாடி மேன்மேற் செல்லுங் கழிபெருஞ் சிறப்புடையரா மென்று கடைப் பிடிக்க.

இனி, அசுத்தமாயையின் கீழ்ப் பிரகிருதியிற் றோன்றி குணம் முதல் நிலம் ஈறாகிய இருபத்துநான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களென்றும் அசுத்தாத் துவாவென்றுஞ் சொல்லப்படும். இவையிற்றின்கண் உழல்வாரான உயிர்கள் ஆணவம் வினை மாயை யென்னும் மும்மலப்பற்று மிகுதியும் உடையராய் முக்குணங்களான் மயங்குஞ் சகலர் என்றுரைக் கப்படுவர். வாலாமை பெரிதுடைய சகலர்க்கு ஏற்ற

ருப்பிடமும் உடம்புங் கருவிகளும் நுகர்பொருள்களு மாகப் பயன்படுதலின் இவை அசுத்தாத்துவாவென்று வழங்கப் பட்டன. பிரளயா கலரில் உயர்ந்தோரான சீகண்ட ருத்திரர் கலாதத்துவத்தைக் கலக்கி அதன்கணின்று பிரகிருதி மாயையைத் தோற்றுவிப்பர். அப்பிரகிருதி மாயையினின்று சாத்துவிகம் இராசதந்தாமதம் என்னும் மூன்று குணங்கள் தோன்ற, அத்தத்துவங்கண் மூன்றிலுந் திருமால் நான்முகன் காலருத்திரன் என்னும் மூவரும் சீகண்டருத்திரரின் திருவரு ளாணை வழிநின்று ஏனை இருபத்து மூன்று தத்துவங் களையுந் தோற்றுவித்துப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைப் புரிவர். இவ்வாற்றாற், குண தத்துவத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/236&oldid=1591570" இலிருந்து மீள்விக்கப்பட்டது