உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் - 28

லிருப்பாரான காலருத்திரர்க்கும், இவர்க்கு மேற் றலைவராய்ச் சுத்த வித்தையில் வைகிக் கலாதத்துவத்தில் முத்தொழில் புரிவாரான சீகண்டருத்திரர்க்கும், இவர்க்கு மேற் றலைவராய் ஈசுரம் சாதாக்கியம் என்னுந் தத்துவங் களில் வைகுவாரான அனந்தர் சதாசிவர்க்கும் வேறுபாடு பெரிதாதல் காண்க.

இழுக்

இனி, இம் முப்பத்தாறு தத்துவங்களும் மூவகைப் பாகு பாடுடை யவாய் மூவேறு முதற்பொருள்களின்றுந் தோன்றினவென்றல் என்னை? அவை யனையவும் ஒரு மாயையினின்றே தோன்றினவென்றலாற் படும் கென்னையெனின்; பொருள்களை உள்ளவாறு ஆராய்ந்து அவற்றின் றன்மை களுக்கேற்ப அவற்றைப் பாகுபாடு செய்து தாகுத்தலும், அவ்வவற்றிற்கு முதலாவன இவை யென்று தேர்ந்துணர்தலுமே மெய்யறிவாம்; அவற்றை யங்ஙனம் உணராது தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிழைபடக் கூறுதலே மயக்கவறிவும் அறியாமையும் ஆம். மயக்கவறிவும் அறியாமையும் உளவாங்காறும் பிறவி தூய்தாகாமையின்,

க்

வை தம்மைக் களைந்து மெய்யறிவு பெறுதற்கு முயறலினும் விழுமியது பிறிதில்லையாகலின் மாயை மூன்றா தற்குக் காரணம் மேற்காட்டிய வாற்றால் நன்கு விளங்கு மாயினும், அதனுணர்ச்சி இன்றியமையாச் சிறிப்பிற்றாதல் பற்றி மேலுஞ் சிறிது விளக்குவாம். வைர மணியும் அடுப்புக் கரியும் ஓரியல்பினவேயாமென

இஞ் ஞான்றை இயற்கைப் பொருணூலார் கூறுவர். வைர மணியை நெருப்பில் இட்டால் அது கரியாதல் கண்டு அவர் அங்ஙனங் கூறா நிற்பர். என்றாலும், நெருப்பிலிடுதற்குமுன் அதன் ஒளிவிளக்கத்தையும் அழகையுங் காண்பார் எவரும் அதனை வெறுங்கரியென்று கூறுதற்கு ஒருப்படார். அஃது எற்றாலெனின், கரியின்கண் உள்ள தன்மையும் அம்மணியின் கண் உள்ள தன்மையும் பெரிதும் மாறுபட்டு நிற்றலா லேயாம். இனிக் கரியின்கண் இல்லாத அவிரொளி, வைர மணியில் வரலான தெங்ஙனமென வினவு வார்க்குக் கரியும் வைரமணியும் ஒரே தன்மையவாயினும், வைர மணியிற் றீயின் சேர்க்கை உளதானமையின் அஃது அத்துணை ஒளியுடைத்தாயிற்றெனின்; தீயின் ஒளிவிளக்கத் திற்கு உயிர்வளியின்3 சேர்க்கை இன்றியமையாது வேண்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/237&oldid=1591571" இலிருந்து மீள்விக்கப்பட்டது