உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

213

படுதலானும், வைர மணியில் உயிர்வளி இல்லையென்பது இயற்கைப் பொருணூலார்க்கும் உடம்பாடாகலானும், வைர மணியினொளி தீயின் கூறென்றல் செல்லாது. மற்று

அவ்வொளி விந்துவாகிய மின்னின் கூறு அம்மணியின்கண் விரவுதலானே தோன்றியெதொன்றாம். இனி, அவ்வாறு அதன்கட் காணப்படும் மின்னொளி நிறுத்து எடையறியப்படா மையானும், அது பிறிதொரு பொருளாய்த் திரிவுபடா மையானும் அஃதென்றும் நுண்ணியதாய் நிற்கும் முதற் ெ பாருளேயாவதல்லது காரியப் பொருளாமாறில்லை.

இத்துணை விளக்கமுடைத்தாய் அம்மணியின்கண் விரவி நிற்கும் அதுதான் விந்துமாயை

யென்றறியற்பாற்று.

பிறிதொன்றன் உதவியை அவாவாது தன்னியற்கையிலேயே ஒளி விளக்கமுடைத்தாய்த் திகழும் அவ்விந்து பெரிதுந் தூய்தாதலும், அதுபோல் ஒளி விளக்கமின்றிக் கரிதாய் கிடக்குங் கரி தூய்தாகாமையும் நேரே கண்கூடாய் அறியப் படுதலின் ஒன்று சுத்த மாயையாம் என்றும், ஏனையது அசுத்தமாயையின் காரியமா மென்றும் பகுத்துணர்தல் வேண்டும்.இதனாற் சுத்தமாயை அசுத்தமாயை யிரண்டும் வெவ்றோமென்று கூறிய அறிவுநூற்பொருள் சாலப் பொருத்த முடைத்தாதல் காண்க. இவ்வாறு பொருளும், அப்பொருட் டன்மையும் இருவேறு வகையவாய் நிற்றலின் அவ்வப் பொருளைச் சாரும் உயிர்களும் அவ்வவற்றின் இயல்புக்கேற்ற பெற்றியாய் அறிவு விளங்கு மாறுந் தானே போதரும், சுத்த மாயையைச் சாரும் உயிர் தூய அறிவினதாய் விளங்கும், அசுத்த மாயையைச் சாரும் உயிர் இடையிடையே மயங்கும் தூய்தல்லா அறிவினதாய் நிற்கும்.

அற்றேல், “மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல், ஆயாதாம் ஒன்றை” என்று ஆசிரியர் மெய் கண்ட தேவர் ஓதுகின்றமையின், மாயை உயிர்க்கு அறிவை விளக்கும் நீரதல்லது, அதனை மயக்கும் நீரதன்றென்பது பெறப்படுதலால், மாயை முழுதுந் தூய்தென்றே கொள்வ தல்லது, அதனைச் சுத்தம் அசுத்தம் என இருவேறு வகைப் படுத்துரைத்தல் முதனூலொடு முரணுமாம் பிறவெனின்; அற்றன்று, ஆணவம் உயிர்களின் விழைவறிவு செயல்களை மறைப்பது, மாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/238&oldid=1591573" இலிருந்து மீள்விக்கப்பட்டது