உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

  • மறைமலையம் - 28

L

அவற்றை விளக்குவது என்று ஆசிரியன் கூறியதே பொருள்; மாயை ஒரோவழி உயிர்களின் விழைவறிவு செயல்களை மயக்குமென்றது தனதியற்கையால் அன்று; அது தன்கண் ஆணவமலம் செறிந்து விரவப்பெற்ற பகுதியால் அவ்வாறு அவற்றை மயக்குமென்றலின் அஃது ஆசிரியன் கூற்றொடு முரணாதென்க. என்னை? மயக்குதல், மறைத்தலாகிய தொழில்கள் ஆணவத்திற்கும் அதன் ஆற்றல் விரவிய பொரு ளுக்குமே யாண்டும் ஓதப்படுதலின். எனவே, ஆணவத்தின் ஆற்றல் மிக்கேறிய பொருட்பகுதியே அசுத்த மாயை எனவும், அதன்வலி குறைந்தொடுங்கிய பொருட் பகுதியே சுத்தமாயை எனவும் வரையறுத்துணர்ந்து கொள்க. அற்றாயின், மாயையின் ஒருகூறு ஆணவமலம் மிகுந்திருத் தற்கும்; பிறிதொருகூறு அது குறைந்திருத்தற்குங் காரணம் என்னையெனின்; இறைவன் றிருவருளொளியோடு அணுக்க மாய் நிற்கும் மாயையின் கூறு அவ்வாற்றால் தூயதாயிருக்கு மெனவும், அங்ஙனம் அணுக்கமாய் நில்லாத அதன்கூறு தூய்தன்றியிருக்குமெனவும் அறிதல் வேண்டும். அற்றேல், மாயை எங்கணும் ஊடுருவி நிற்கும் முதல்வனருள் அதன் ஒரு கூற்றில் அணுக்கமாயும் பிறிதொரு கூற்றில் அவ்வாறன்றியும் நிற்குமென்றல் இழுக்காமாலெனின்; நன்று கூறினாய், இறைவனருள் முனைக்குமிடத்தே அணுக்க மாயும், முனையா விடத்தே அவ்வாறன்றியும் நிற்குமாகலின், அது பற்றி அவனதெல்லையற்ற அருள்நிறைவுக்கு வர தோர் இழுக்கில்லை. அஃதொக்குமாயினும், இறைவனருள் ஓரிடத்து முனைக்குமென்றதன் கருத்து யாதெனின்; அஃது, உயிர்களின் பொருட்டு நுண்ணியவுருவில் நின்ற மாயை யிலிருந்து அதன் காரியங்களைத் தோற்றுவிக்கக் கருதின மையே 'முனைப்பு' என்பதற்குக் கருத்தாவதாம். அற்றேல், மாயையின் பரப்பு முழுவதும் ஊடுருவி நிற்கும் .இறைவி அங்ஙனங் கருது வளாயின் அக்கருத்து அம்மாயை எங்கும் முனைக்குமாகலின், அஃது அதன் ஒரு கூற்றின்மட்டுமே முனைக்கு மென்றல் யாங்ஙனமெனின், மாயையின் பரப்பினுள் இறைவியின் அருளோடு முதற் சேர்க்கை யாயிருக்கும் நுண்ணிய முதற்பரப்பு அவவ்வாற்றால் தான் என்றும் நுண்ணிய ஒளியுருவிற்றாய்த் தன்கண் ஆணவ மலத்தின் வலி ஏறுதற்கு இடங்கொடாமலே நிற்கும்; மற்று அம்முதற் சேர்க்கையின் பின் நிற்கும் அம்மாயையின் ஏனைப்பகுதியெல்லாம் அங்ஙனம் நேரே

க்கடவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/239&oldid=1591574" இலிருந்து மீள்விக்கப்பட்டது