உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

215

அருளால் ஊடுருவப்படாமையின், அவை தங்கண் ஆணவவலி பெருகி நிற்றற்கு இடஞ்செய்து தாமும் அதன் சேர்க்கையால் அசுத்தமாமென்பது. இதனாலன்றே கீழுள்ள மாயையைவிட அதன்கட்டோன்றிய ஆறு தத்துவங்கள் அசுத்தம் மிகவு டைய ஆனதூஉம், அவற்றைவிடப் பிரகிருதி மாயையும், அதனைவிட அதன்கீழுள்ள இருபத்துமூன்று தத்துவங்களும் அசுத்தம் மிகப்பெரிதுடைய ஆனதூஉம் என்க. எனவே மாயை தன்னியல் பில் உயிர்களின் அறிவை விளக்கும் நீரதன்றி மயக்கு நீரதன் றென்ப தூஉம், அவ்வாறாயினும் அஃது ஒரோவழி அதனை மயங்கச் செய்வது அதன்கீழுள்ள தத்துவங்களில் ஆணவ மலத்தின் வலிமிகுந்திருத்த லினா லேயா மென்பதூஉம், அதனால் து முதனூல் ஆசிரியன் கருத்தொடுமாறு

66

படுமென்க.

முனிவரும்

சாராரை

காள்ளா தன்பதூஉம் இனிது பெறப் வ்வுண்மை தெரித்தற்கன்றே சிவஞான 'அஞ்ஞானங் காட்டுதல் மாயை கன்மங்கட்கு ஆணவமலச் சார்வானாகிய செயற்கை, ஆணவ மலத்திற் கஃது இயற்கை’ என்று சிவஞான போத பாடியத்தின் கண்ணும்,+ "மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே”** என்று வழி நூலாசிரியர் கூறிய பகுதிக்கு “இத்தன்மைத் தாகிய மாயை ஆணவமலம்போல மயக்கமே செய்யுமென்னுஞ் சைவருள் ஒரு மறுத்தற்பொருட்டு மயக்குமுஞ் செய்யு மென்றுங் கூறினார் மயக்கமும் என்னும் உம்மை அது தன் இயல்பன்மை உணர நின்றது” என்று அதன் உரைக்கண்ணும் விரித்துச் கூறுவாராயினர். அதுவே யுமன்றி யுமன்றி அவர் விந்துவின் மாயையாகி” என்னுந் திருச் செய்யுளுக்கு உரை உரைக்கின்றுழி "மலகன்மங்களோடு விரவாது முதற் காரணமாய் நிற்பது சுத்தமாயையென்றும், அஃதேனை யிரண்டனையும் வியாபித்து மேலாய் நிற்ப அவ்விந்துவின் கீழாயடங்கி மலகன்மங்களோடு விரவி முதற்காரணமாவது அசுத்தமாயை யென்றும், அவ்வசுத்த மாயையது தூலபரிணாமமாய்த் தோன்றுவது பிரகிருதி மாயையென்றும் கூறப்படும்” என்றுரை கூறியதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று.

66

இவ்வாறு ஆணவமல வலிமிகுந்துள்ள காரியப் பொருள்களின் கூட்டுறவு எந்த உயிரின்கண் உள்ளது அந்த உயிரின் அறிவு ஒருகால் விளங்கிப் பிறிதொருகால் மயங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/240&oldid=1591575" இலிருந்து மீள்விக்கப்பட்டது