உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 28

இம்முறையே மாறி மாறி நிகழா நிற்கும்,. இவற்றுள் அவ்வுயிரின் அறிவு விளக்கம் அதனோடு கூடியுள்ள மாயையின் காரியப் பொருளானும், அதன் அறிவு மயக்கம் அப்பொருளோடு உடன்விரவி நிற்கும் ஆணவ மலத்தானும் வருவனவாகும். அஃதொக்குமாயினும், ஆணவமலம் உயிர்களின் விழைவறிவு செயல்களை மறைத்து உடனாய் நிற்குமென அறிவுநூல்கள் உரைப்பக் காண்டுமன்றி, அது மாயையிலும் உடன்விரவி நிற்குமென அவை உரைப்பக் கண்டிலாமெனின்; நன்று சொன்னாய், ஆணவத்தின் செயல் உயிர்களின் விளங்கித் தோன்றுமாப்போல் ஏனை மாயை மாயேயங்களில் ஆராய்ச்சி யானன்றி விளங்கித் தோன்றாமை யானும், அங்ஙனம் அதன் இரு ப் பை ஆராய்வதூஉம் அதன் மறைப்பினின்று சிறிது விலகிய உயிரேயாகலானும், விழிப்பின்கண் இடையிடையே நிகழும் மறதியும் உறக்கத்தின் கண் முழுதுமாய் நிற்கும் அறியாமையுமே ஆணவத்தின் செயல்களாதல் எவர்க்கும் நேரே யறியக் கிடத்தலானும் ஆணவம் உயிர்களைப் பற்றியிருக்கும் நிலையே நூல்களால் நுவலப்பட்டது; நு மாயேயங்களில் அஃது ஊடுருவி நிற்கும் நிலை அது பற்றி யாராய்வார் உணர்ந்துகோடல் எளிதாகலின், அது நூல்களான் நுவலப்பட்டது.

ஏனை மாயை

எனவே, இற்றைக்கு 200-ஆண்டுகட்கு முன்னிருந்த மெய்கண்டதேவர்க்கும், இற்றைக்கு ஆயிர ஆண்டுகட்கு முன்னிருந்த சேந்தனார்க்கும் இடைப்பட்டதொரு காலத்தே தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனாரும், அவர் தம் ஆசிரியர் திருவிசலூர் உய்யவந்ததேவ நாயனாரும் இருந்தாராகற்பாலார். அக்காலந்தான் யாதோவெனினி; சேக்கிழார் பெருமான் அரிவாட்டாய நாயனார் புரணத்திற்,

“காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தி னோடே ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவாரொத்தார்.”

எனக் கூறிய செய்யுட்கணுள்ள ஊட்டியரிதல்' என்னுஞ் சொற்றொடரைத் திருக்களிற்றுப்படியாரில் “ஊட்டியறுத் தவற்கே ஊட்டியறுத்தவரை” என என உய்ய வந்ததேவ நாயனார் எடுத்தாண்டிருத்தலின் இவரும் இவராசிரி யருஞ் சேக்கிழார்க்குச் சிறிது பின்னே யிருந்தமை திண்ணமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/241&oldid=1591576" இலிருந்து மீள்விக்கப்பட்டது