உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்க.

சிவஞான போத ஆராய்ச்சி

217

இவ்வாற்றால், 'திருவுந்தியார்,’ ‘திருக்களிற்றுப் படியார்' என்னுஞ் சைவசித்தாந்த நூல்கள் இரண்டனையும் அருளிச் செய்த உய்யவந்ததேவ நாயனார் இருவரும் இற்றைக்கு 750 ஆண்டுகட்கு முன்னே இருந்தாரெனக் கோடல் இழுக்காது. இங்ஙனம் இவ்விருவரும் மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்து, அவர் 'சிவஞானபோதம்' இயற்றுதற்கு முன்னரே ‘திருவுந்தி யார்,' 'திருக்களிற்றுப் படியார்’ என்னும் என்னும் நூல்களை ஆக்கியிருத் தல் கண்டு போலுஞ், சித்தாந்த நூல்கள் பதினான்கனையுந் தொகுத்துக் கூறும்,

“உந்தி களிறு உயர்போதஞ் சித்தியார்

பிந்திருபா உண்மை பிரகாசம்--வந்த அருட் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று.'

என்னும் பழையவொரு வெண்பாச் செய்யுள், முதலிலே 'திருவுந்தியார்,’ ‘திருக்களிற்றுப்படியார்' என்றும் நூல் களையும், அவற்றின்பின் சிவஞானபோத முதலான ஏனைப் பன்னிரண்டு நூல்களையும் அடைவே வைத் தோதுவதாயிற்று. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்த வாற்றால், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரண்டு நூல்களுமே, சைவசித்தாந்த நூல்கள் பதினான் கனுள் மிகப் பழையனவாய் நிற்றல் தெளியப்படுமென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/242&oldid=1591577" இலிருந்து மீள்விக்கப்பட்டது