உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

பின்னிணைப்பு1

சைவ சித்தாந்த நூல்கள்

1. திருவுந்தியார்

சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு. அப்பதினான்கில் திருவுந்தியார் என்னும் நூலை அருளிச்செய்தவர் உய்யவந்த தேவநாயனாரென்பது. அத்திருவுந்தியாரின் இறுதிக்கண்

உள்ள,

"வையம் முழுதும் மலக்கயங் கண்டிடும்

உய்யவந்தா னுரை.

என்னுஞ் செய்யுளாலும், இவர் இருந்தவூர் திருவிசலூர் என்பது, இவர் தமக்கு மாணாக்கருந் திருக்களற்றுப்படியார் என்னும் நூலை அருளிச்செய்தவருமான தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் தாம் அருளிச்செய்த திருக்களிற்றுப்படியார் 96ஆஞ் செய்யுளில்

“திருவிசலூர் ஆளுஞ் சிவயோகி இன்றென் வருவிசையை மாற்றினான் வந்து.

அத்

என அருளிச்செய்திருக்கும் வரலாற்றுக் குறிப்பினாலும் நன்கு புலனாம். திருவுந்தியார் அருளிச்செய்த ஆசிரியர் பெயரும் உய்ய வந்ததேவ நாயனார் என்பதே யாகுமென இங்ஙனந் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கவுஞ், “சிவஞான போத வசனாலங்காரதீப் நூல் இயற்றிவர் அவர் பெயரை “ஆளவந்த தேவ நாயனார்” என மாற்றிப் பிழை பட வரைந்திட்டார். ஆசிரியர் மாணாக்கர் இருவர்க்கும் 'உய்யத்தேவ நாயனார்' எனப் பெயரிருத்தல் கண்டு, ஆசிரியர் பெயரை அங்ஙனம் மாற்றி அவர் பிழைசெய்தார் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/244&oldid=1591579" இலிருந்து மீள்விக்கப்பட்டது