உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் 28

2. திருக்களிற்றுப்படியார்

இனித், திருக்களிற்றுப்படியார் என்னும் நூலை ஆக்கி யருளினவர் பெயரும் உய்யவந்ததேவ நாயனார் என்பதே யாதலும், ஆயினும் இவர் இருந்தவூர் ‘தென்கடவூர்' எனப் பிறிதொன்றாதலும் இந்நூலுக்குரைசெய்த சிவப்பிரகாச ரைக்

கூறுஞ்,

66

“ சேடன் படிபுரக்குந் தென்கடவூர் உய்யவந்தான்

பாடுங் களிற்றுப் படிதனக்கு -- நீடிமையோர் தேடுபுகழ்ச் செஞ்சொற் சிவப்பிரகா சன்றிருந்த நாடியுரை செய்தான் நயந்து.”

என்னும் உரைப்பாயிரச் பெறப்படுதல் காண்க.

செய்யுளானே

தெற்றெனப்

திருக்களிற்றுப்பாடியார் இயற்றிய உய்யவந்ததேவ நாயனார், தாம் இயற்றிய இந்நூலின் வெண்பாக்களில், திருவுந்தியாரிலுள்ள செய்யுட்களை எடுத்து இடையிடையே பிணைத்து நூலருளிச் செய்திருத்தலை உற்று நோக்குங்கால், இவர்தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்திய ஆசிரியன்றன் மெய்ம்மொழிகளைத் தமது நூலுட் பொன்னேபோற் பொதிந்துவைக்கும் விழைவு பெரிதுடையராயிருந்த குறிப்புப் புலனாகாதொழியாது. ஆகவே, திருவுந்தியார் அருளிச்செய்த திருவிசலூர் உய்யவந்ததேவ நாயனாரே, திருக்களிற்றுப்படியார் ஆக்கிய தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்க்கு ஆசிரிய ராதல் நன்கு துணியப்படும். இதற்கு மாறாக, இவ்வாசிரியர் இருவர்க்கும் இடையே திருவிசலூர் ஆளுடையதேவ நாயனார் அல்லது ஆளவந்ததேவ நாயனார் என்பவர் இருந்தாரெனவும், அவரே தாம் முதல் உய்யவந்ததேவ நாயனார்பாற் கேட்டறிந்த மெய்ப்பொருளை இரண்டாம் உய்யவந்ததேவ நாயனார்க்கு அறிவுறுத்தருளினா ரெனவுஞ் சிலர் கட்டிவைத்த கதைக்குயாம் சான்றேதுங் காண்கிலம்.

இவ்வி

வ்விரு

3. இவ்விருநூல்களின் காலம்

ஒருவர்

னித், 'திருவுந்தியார்,’ “திருக்களிற்றுப்படியார்' என்னும் நூல்களின் ஆசிரியர்கள் சிவஞான போதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/245&oldid=1591580" இலிருந்து மீள்விக்கப்பட்டது