உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

221

இயற்றியருளின ஆசிரியர் மெய்கண்டதேவர்க்கும், அவர் மாணாக்கர் அருணந்திசிவனார்க்கும், அவர் வழிவந்த உமாபதி சிவனார் முதலாயினார்க்கும் முற்பட்டவராதல் ஆராய்ச்சியாற் புலனாகின்றது.மெய்கண்டதேவர் மாணாக்கர் களும், அம்மெய் கண்டதேவர் வழிப்போந்த ஏனையாசிரியன் மாரெல்லாருந் தம் நூல்களுள் மெய்கண்டதேவரைக் குறித்துச்சொல்லி, அவரைப் போற்றுங் கடப்பாடு மேற் கொண்டவராகவே காணப் படுகின்றனர், அது

“பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்டவிரு தயகமல முகைக ளெல்லாங்

கண்டிறப்பக் காசினிமேல் வந்தவருட் கதிரோன் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்க்கண்ட தேவன்மிகு சைவ நாதன்

புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்

பொற்பாத மெப்போதும் போற்றல் செய்வாம்’

என்று சிவஞானசித்தியார் பரபக்கத்தும்,

66

“என்னையிப் பவத்திற் சேரா

வகையெடுத் தென்சித் தத்தே

தன்னைவைத் தருளினாலே

தாளினை தலைமேற் சூட்டு மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய்

மேவிவாழ் மெய்கண் டான்நூல்

சென்னியிற் கொண்டு சைவத்

திறத்தினைத் தெரிக்க லுற்றாம்”

என்று அதன் சுபக்கத்தும் ஆசிரியர் அருணந்திசிவனார் கூறுமாற்றானும், மெய்கண்ட தேவர்க்கு மற்றொரு மாணவ ரான திருவதிகை மனவாசகங்கடத்தார் தாம் அருளிச்செய்த உண்மை விளக்கம் என்னும் நூன்முகத்திற்,

“பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளா மெய்காட்டு மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/246&oldid=1591581" இலிருந்து மீள்விக்கப்பட்டது