உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் - 28

மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினா வையாநீ தான்கேட் டருள்.”

என்று நுவலுமாற்றானும், அருணந்திசிவனார் மாணவர் மரபில் வந்தவரான உமாபதிசிவனார் தாம் இயற்றியருளிய ப சிவப்பிரகாசம் என்னும் நூலின் பாயிரத்திற் றாம்வந்த ஆசிரியர் மரபு கூறுவான் புகுந்து,

“தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிக ளடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணெய் மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா

விரவுபுக ழருணந்தி விறலார் செல்வத் தாவிலருள் மறைஞான சம்பந்த ரிவரிச்

சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே.

எனப் பகருமாற்றானும், இவ்வாசிரியர் மரபில் உமாபதி சிவனார்க்குப் பின்னேபோந்த சீகாழிப் சிற்றம்பலநாடிகளுந் தாம் அருளிச்செய்த துகளறுபோதம் என்னும் நூன் முகத்திற், “பதிபசு பாசக் தெரிந்தந்தப் பாச

விதிவிழியை வென்றதனின் வேறாங் -- கதிவழங்கு மெய்கண்டான் சந்தான மேவிற் சிவானந்தங் கைகண்டார் காணார் கரு’

எனத் தாம் மெய்கண்ட தேவர் மரபில் வந்தமை தெளியப் புகலுமாற்றானும் நன்கு விளங்காநிற்கும். எனவே, மெய்கண்ட தேவர் மரபில் வந்தாரெல்லாருந் தாம் அம்மரபில் வந்த வரலாற்றினை ஐயுறுதற் கிடனின்றித் தெற்றெனக் கிளந்து சொற்றாமைபோலத், 'திருவுந்தியார்,’ ‘திருக்களிற்றுப் படியார்’ என்னும் நூல்களை ஆக்கிய ஆசிரியரிருவரும் அம் மெய்கண்ட மரபினைச் சுட்டிக் குறிப்பாலேனும் வெளிப் படையாலேனும் ஏதும் உரைப்பக் காணாமையின், அவரிரு வரும் மெய்கண்ட தேவநாயனார்க்கு முன்னிருத்தோராதல் நன்கு துணியப்படும்.

அற்றேல், உய்யவந்ததேவர் எனப் பெயரிய அவ்வாசிரியர் இருவரும் மெய்கண்ட தேவர்க்கு எத்துணை காலம் முற்பட்டவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/247&oldid=1591582" இலிருந்து மீள்விக்கப்பட்டது