உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

223

ரெனிற், காட்டுதும். இரண்டாம் உய்ய வந்ததேவர் தாம் அருளிச்செய்த ‘திருக்களிற்றுப்படியா’ரில்,

“மோகம் அறுத்திடில்நாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் -- தோகையர்பாற் றூதாகப் போகவிடும் வன்றொண்டன் றொண்டுதனை ஏதாகச் சொல்வே னியான்.'

எனப்போந்த

وو

செய்யுளிற்

சுந்தரமூர்த்தி

நாயனாரைக்

கூறியிருத்தலின், இவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின்னர் ஒருகாலத்தேயிருந்தவரென்பது இனிது விளங்கற் பாலதேயாம்.

இனிச், சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின்னும் மெய்கண்ட தேவர்க்கு முன்னுஞ் சென்ற காலத்தில் எதன் கண்ணே உய்யவந்ததேவநாயனார் இருந்தா ரென்பதூஉஞ் சிறிது ஆராய்ந்து காட்டுவாம். திருக்களிற்றுப்படியாரின் செய்யு ளாகிய,

“அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை

அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற் சேர்ந்தனார் செய்த செயல்.

என்பதன்கட், 'சேந்தனார்’ என்னும் அடியவர் தாம் வழக்கமாய்ச் சிவனடியார்க்கு அளித்துவந்த சோற்றுணா அளிக்கப் பொருளில்லாமல் ஒருகால் மிக்க வறுமை எய்தி வருந்திய வழியுந், தாஞ் செய்துபோந்த அவ்வறத்தின் வழுவா ராய்த், தங்கையிற் கிடைத்த சிறுகாசு கொண்டு களியுணவு சமைத்து, அதனைப் படைத்தற்குச் சிவனடியாரைத் தேடச், சிவபிரானே ஓர் அடியவர் வடிவிற்போந்து அக் களியமு தினைப் பெற்றுண்டு மறைந்ததாகிய நிகழ்ச்சியினைக் குறித் திருத்தலால் இவர் சேர்ந்தனார் காலத்திற்குப் பிற்பட்டவராதல் பெறப்படும்.

இனி, இங்ஙனம் இவராற் குறிப்பிடப்பட்ட சேந்தனார் என்னும் அடியவர் பட்டினத்தடிகளுக்கு மாணாக்க ரென்பது, அடிகள் துறவு பூண்டபின், அவரது பெரும் பொருளைக் கவர்தற்பொருட்டு அஞ்ஞான் றிருந்த அரசன், அடிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/248&oldid=1591583" இலிருந்து மீள்விக்கப்பட்டது