உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் 28

பொருளைக் காத்துநின்ற சேந்தனாரைச் சிறையிலிட்டு வருத்தாநிற்பச், சேந்தனாரின் மனைவியாரும் மகனாரும் அக் காடுமையினைப் பட்டினத்தடிகள்பாற் சென்று தெரிவித்து

முறையிட, அடிகள்,

66

“மத்தளை தயிருண் டானும்மலர்மிசை மன்னி னானும் நித்தலுந் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி

66

பாடச்

செய்த்தளை கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்த னிட்ட கைத்தளை நீக்கிஎன்முன் காட்டுவெண் காட்டு ளானே." என்னுஞ் செய்யுளால் றைவனை வேண்டிப் சேந்தனார் உடனே சிறையினின்றும் விடுவிக்கப்பட்டு அடிகள் பால் உய்க்கப்பட்டனர் என வழங்கும் வரலாற்றி னாற் றெளியக் கிடக்கின்றது. இச்சேந்தனார் அருளிச் செய்த “திருவிசைப்பா,” “திருப்பல்லாண்டு என்னுமிரண்டும், பட்டினத்தடிகள் அருளிச் செய்த "திருக்கழுமல மும்மணிக் கோவை, "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை” “ திருவேகம்ப முடையார் திருவந்தாதி,” “திருவொற்றியூர் ஒருபா ஒருபது” என்னும் நான்குஞ் சைவத் திருமுறைகள் பதினொன்றில், முறையே ஒன்பதாந் திரு முறை, பதினோராந் திருமுறைகளில் நம்பி யாண்டார் நம்பி என்பவராற் கோக்கப்பட்டிருத்தலின், பட்டினத் தடிகளும் அவர் தம் மாணக்கராகக் கருதப்படுஞ் சேந்தனாரும் நம்பியாண்டார் நம்பிகளுக்கு முன்னிருந்த வராதல் துணியப் படும். நம்பி யாண்டார் நம்பிகள் காலம் இவற்றைக்கு எண்ணூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்ட தாகலின், அவர்க்கு முன்னிருந்த பட்டினத்தடிகளும் அவர்தம் மாணவரான சேந்தனாருஞ் சிறிதேறக்குறைய ஆயிர ஆண்டுகட்கு முன்னே யிருந்தவ ராதல் தானே போதகரும். என்றாலும், பட்டினத்தடிகள் இருந்த காலஞ் சுந்தரமூர்த்திகள் காலத்திற்கும் பிற்பட்ட தென்பது, திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில்

“வித்தகப் பாடல் முகத்திற் தடியருந்

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்.”

என்று பட்டினத்தடிகளே கூறுமாற்றால் விளங்கும்.

(28)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/249&oldid=1591584" இலிருந்து மீள்விக்கப்பட்டது