உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

225

இனி, உய்யவந்ததேவ நாயனார்க்குப் பின்னே யிருந்த மெய்கண்டதேவர் காலமுஞ் சிறிது ஆராயற்பாற்று. மெய்கண்ட தேவர் மரபில் நாலாமவராய்த் தோன்றிய உமாபதி சிவனார் தாம் அருளிச்செய்த ‘சங்கற்ப நிராகரணத்’தில்,

66

ஏழஞ் சிருநூ றெடுத்த வாயிரம் வாழுநற் சகன மருவா நிற்ப.

وو

எனச் சாலிவாகன ஆண்டு 1235 இல் தில்லைப் பொன்னம் பலத்தை யடுத்ததொரு மண்டபத்தே குழுமிய பல்சமய ஆசிரியர் ஒருவரையொருவர் மறுத்துக்கூறிய கோள்களை யெல்லா மெடுத்தியம்பி அவற்றின் பொய்ம்மை தேற்றுதற்கே இந்நூல் இயற்றலாயிற்று என இந்நூல் வரலறு கூறு முகத்தால் இந்நூலியற்றிய காலமும், இந்நூற்பாயிரத்தே நன்கெடுத்து மொழிதலால், இவர் தாம் இருந்த காலம் இற்றைக்கு 623 ஆண்டு களுக்கு முன்னென்பது இனிது விளங்கா நிற்கும்.

னி, உமாபதிசிவனார்க்குமுன், அவர்தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரும், அவர்க்குமுன் அவர்தம் ஆசிரியர் அருணந்திசிவனாரும், அவர்க்குமுன் அவர் நம்மாசிரியர் மெய் கண்டதேவரும் இருந்தாரென்பதனால், உமாபதி சிவனார்க்கும் மெய்கண்ட தேவர்க்கும் இடையே குறைந்தபடி 80 ஆண்டு களாதல் சென்றனவாகக் கோடல் வேண்டும். அங்ஙனங் கொள்ளவே, மெய்கண்டதேவர் இற்றைக்கு 700 - ஆண்டுகட்கு முன்னிருந்தாரென்பது முடிக்கப்படும். இதுவே அவரிருந்த காலமென்பதற்குத், திருவண்ணாமலைக் கோயிலில் மெய்கண்ட தேவராற் பொறிப்பிக்கப் பட்ட ஒரு கல்வெட்டின் காலஞ் சாலிவாகன ஆண்டு கசருச- என்று காணப்பட் டிருப்பதும் ஒரு சிறந்த சான்றாகும்Å என்க.

எனவே, இற்றைக்கு 700 - ஆண்டுகட்கு முன்னிருந்த மெய்கண்ட தேவர்க்கும், இற்றைக்கு ஆயிர ஆண்டுகட்கு முன்னிருந்த சேந்தனார்க்கும் இடைப்பட்டதொரு காலத்தே தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனாரும், அவர் தம் ஆசிரியர் திருவிசலூர் உய்யவந்ததேவ நாயனாரும் இருந்தாராகற் பாலார். அக்காலந்தான் யாதோவெனின்; சேக்கிழார் பெருமான் அரிவாட்டாய நாயனார் புரணத்திற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/250&oldid=1591585" இலிருந்து மீள்விக்கப்பட்டது