உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் - 28

எனச் சிவஞானபோதச் சிறப்புப் பாயிரத்தின்கட் குறித்த வாற்றானுந், தமது சிவஞானசித்திப் பரபக்கப் பாயிரத்தில்,

“விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்'

எனவுஞ், சிவஞானசித்திச் சுபக்கப்பாயிரத்தில்,

“என்னையிப் பவத்திற் சேரா

வகையெடுத் தென்சித் தத்தே

தன்னைவைத் தருளி னாலே

தாளிணை தலைமேற் சூட்டும்

மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய்

மேவிவாழ் மெய்கண் டான்நூல்

சென்னியிற் கொண்டு சைவத்

திறத்தினைத் தெரிக்க லுற்றாம்.”

எனவும் ஓதியவாற்றானுந், தாம் அருளிச் செய்த மற்றொரு சித்தாந்த நூலாகிய இருபா இருபஃது என்பதன் இரண்டாஞ் செய்யுளில்,

66

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!”

என விளங்கவெடுத்துக் கூறுதலானும் நன்கு பெறப்படும்.

இனி, மெய்கண்டதேவர்க்கு அவர்தம் தாய் தந்தையரால் இடப்பட்ட பெயர் சுவேதவனப் பெருமான் என்பதேயாம். இஃது அவர் மாணாக்கர் அருணந்திதேவர் சிவ ஞானபோதப் பாயிரத்தில் வெண்ணெய்ச் சுவேதவனன் என்று ஓதுதலோடு, இருபா இருபஃது 16-ஆஞ் செய்யுளில்,

66

“திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேதவனத்தான்.” உருவென்ன வந்தெடுத்தான் உற்று,”

என்று அருளிச் செய்திருத்தலானும் நன்கறியப்படும். இவர்க்குச் சுவேதவனப்பெருமான் எனப் பெயர் போந்த காரணம்

பின்வருமாறு கூறுப:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/259&oldid=1591594" இலிருந்து மீள்விக்கப்பட்டது