உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

233

யொப்பது; சிவஞான போதமோ ஒரு புன்னுனிமேல் நிற்கும் ஒரு பனித்திவலையை யொப்பது; கண்ணாடியும் பனித் திவலையுந்தாம் வடிவிற் சிறியனவாய் இருந்தே தம்மிற் பெரிய பலவடிவங் களைத் தம்மகத்தே கொண்டு அவை தம்மை விளங்கக் காட்டு மாயினும் பனித் திவலைஅளவின் மிகச் சிறியது. கண்ணாடி யோ பனித்திவலையினும் பன்மடங்கு பெரியது; அதுபோற் றிருக்குறளுஞ் சிவஞானபோதத்தினும் பன்மடங்கு பெரிய தொரு சுருக்க நூலாகும். எனவே, அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருட் பரப்பெல்லாம் ஒருங்கு செறித்துத் திருக்குறள் யாத்த தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது அறிவாற்ற லினுங், கடவுள் உயிர் மும்மலம் வீடுபேறு என்னும் அறிதற்கரிய நுண்பொருட் பரப் பெல்லாம் ஆராய்ந்து தன்னகத்தடக்கித் தெளிக்குஞ் சிவஞானபோதத்தை யாத்த ஆசிரியர் மெய் கண்டதேவ நாயனாரது தெய்வ அருளறிவின் ஆற்றல் பன் மடங்கு சிறந்த தொன்றாய் வீறிவிளங்கல் நடுநின் றாராய் வார்க்கெல்லாம் நன்கு விளங்கற் பாலதேயாம். திருக்குறண் மாட்சியினை வியந்து, “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

66

பனையளவு காட்டும் படித்தால்-மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி.

என்று பண்டை நல்லிசைப் புலவரான கபிலர் பாடிய பாயிரவுரை, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைவிட மெய்கண்டதேவர் இயற்றிய சிவஞானபோதத்திற்கே சாலப் பொருந்துவதா மென்க.

'சிவஞானபோதம்' என்னுஞ் சைவசித்தாந்த முதல் நூலுக்கு ஆசிரியரான மெய்கண்டதேவர் பிறந்தருளிய இடந் திருவெண்ணெய் நல்லூரென்பது, இவர்தம் முதன் மாணவ

ரான அருணந்திதேவர்,

“உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்

பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/258&oldid=1591593" இலிருந்து மீள்விக்கப்பட்டது