உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் 28

பொருட்பரப்பெல்லாம் அகத்தடக்கிய தொருநூலும் இந் நிலவுலகத்துள்ள எந்த மொழியிலும் இல்லையென்பது திண்ணம்.

நன்

ன்னுஞ் சொற்சுருங்க நூலியற்றுதல் அரிதே யாயினும், அங்ஙனம் இயற்றும் நூலிற் றான்கூறக் கருதிய அரும்பொரு ளெல்லாம் ஒருங்குசெறித்து அவற்றை நன்கினிது விளங்க வைத்தல் எவர்க்கும் அரிதரிது. வட மொழியிற் சொற்சுருங்க அமைக்கப்பட்ட ‘சாங்கியம்’ ‘ யோகம், வைசேடிகம், நையா யிகம், மீமாஞ்சை, வேதாந்தம் முதலான நூல்கள் பலவுள, என்றாலும், அந்நூற்பொருள்கள் அந்நூற் சூத்திரயாப்புகளால் கு விளங்குதலில்லை. அதனால் அவையிற்றுக்கு உரைகாணப் புகும் ஆசிரியர் தம்முள் ஒருவரோடெருவர் மிக கலியிடும் பூசலுக்கும் ஓர் அளவேயில்லை. அங்ஙனஞ் சூத்திரப்பொரு டுணிதற்குப் பெரும்பாலும் இடனும் வாயிலும் இன்றிச் சொற்சுருங்க இயற்றப்பட்ட வடமொழி நூல்களை யொப்பன தமிழ் மொழியில் ஒருசில தாமும் இல்லை. தமிழ் இலக்கண இலக்கிய அறிவு வாய்ந்தா ரெவருந் திருக்குறள், சிவஞான போதம் என்னும் நூல்களுக்கு உரையுதவியல்லாமலே பொரு டெரிந்து கோடல் இயலும். மற்று, மேற்கூறிய வடமொழிச் சுருக்க நூல்களோ, தம்மையியற்றிய ஆசிரியரே தம்மாணாக் கர்க்குத் தம் பொருள் அறிவுறுக்க, அம் மாணாக்கர் அப்பொருளைத் தம் மாணாக்கர்க்கு அறிவுறுக்க இங்ஙனமாக அவ் வாசிரியர் தம் மாணாக்கர் வழியில் வந்தார் வகுத்த உரையுள வாயின், தம் பொருளை உள்ளவாறறிவிக்குமே யன்றி, அங்ஙனம் அவ்வாசியரிய மாணாக்க

மரபில்

வாராதார்க்குத் தம் உண்மைப் பொருளைப் புலப்படுத்துஞ் சொல்லாற்றல் வாயாதனவாய்த் தம்மைப் பயில்வாரெவர்க்கும் பெரிய தொரு மறுக்கத்தினை விளைவிப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய இடர்ப்பாடு செந்தமிழ் நூல்களிற் காணப்படா தென்பதற்குத் திருக்குறளுஞ் சிவஞானபோதமுமே உறுபெருஞ் சான்றாம். சீரிய நூல்களில், திருக்குறள், சிவஞானபோதம் என்னும் இவ்விரண்டுமே தாங்கருதிய பொருளைத் தம்மின் வேறானவோர் உரையுதவி வேண்டாது தக்கார்க்குத் தெற்றெனப் புலப்படுக்குஞ் சுருக்க நூல்களாய்த் தலைசிறந்து நிற்கின்றன. சுருங்கியவடிவிலுந் திருக்குறள் ஒரு கண்ணாடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/257&oldid=1591592" இலிருந்து மீள்விக்கப்பட்டது