உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

231

பெருமாட்சி வாய்ந்த நூல் திருக்குறள் ஒன்றேயாம். பின்றைச் செந்தமிழ் நூல்களில் அவ்வுறுதிப் பொருள்களை எய்து தற்குரிய உயிர்களினியல்பும், அவை அவையிற்றைப் பெற வாட்டாது தடைசெய்யும் ஆணவ மலத்தின் இயல்பும், உயிர்கட்கு அறிவையும் முயற்சியையும் எழுப்புதற் பயத்தவாம் மாயை வினைகளின் இயல்பும், உயிர்களுக்கு மாயையைக் கூட்டி அவ்வாற்றாலல் அறிவு முயற்சிகளைத் தோற்றுவித்துத் தனது பேரின்பத்தை நுகர்விப்பானான முதல்வன் இயல்பும், வீடு பேற்றின் றன்மையும் வினாவிடையுள்ளுறுத்து விளக்கித் திட்ப நுட்பஞ்செறிந்து, திருக்குறளினும் பார்க்கப் பன்மடங்கு சிறந்த மாட்சிமிக்கதாய் நிலவுவது சிவஞானபோதம் ஒன்றேயாம். திருக்குறள் பெரும்பாலும் மக்கள் ஒழுகலாறு களையே விரித் துரைப்பது; கடவுள் உயிர் மலம் மாயை வினைகளையும் வீடு பேற்றையும் ஆராய்ச்சி முறையானன்றி இயற்கை முறையான் வைத்துச் சுருக்கி நுவல்வது. திருக்குறட் பயிற்சிகொண்டு றைவனிருப்பும் இறைவன் பொதுவியல்பு களும் உணர லாகு மேயன்றி, அவன் றன்னை நினைந்துருக அவாவும் அன்பர் பொருட்டு இன்றியமையாது மேற் கெள்ளும் அருளுவச் சிறப்பியல்பினை உணர்தல் இயலாது; அங்ங னமே, அதனால் ஏனை உயிர்களின் சிறப்பியல்புகளும், மல மாயை வினை வீடுபேறுகளின் உண்மைத் தன்மைகளும் தன்மைகளும் வெள்ளிடை லங்கலென விளங்கவறிந் துறுதி கூடுதல் இயலாது. மற்றுச் சிவஞானபோத நூலிலோ இவ்வியல்புகள் முற்றுமெடுத்துத் தெளித்து விளக்கப்பட்டிருக்கின்றன; திருக்குறளினும் மிகப் பெரிய ஆராய்ச்சிகளை அகத்தடக்கிய இவ்வறிவுப் பெருநூல், அதனினும் அளவிற் பெரிய தொன்றாக இருக்கற்பால தெனினும், இஃது அதனில் ஏழிலொரு கூறுக்குங் குறைவான அளவினதாயிருத்தலே பெரியதோர் இறும்பூதினைப் பயவா நிற்கின்றது. திருக் குறள் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட் பாக்கள் அல்லது இரண்டாயிரத்து அறு நூற்றறுபதடிகளால் ஆக்கப்பட்ட தொன்றாகும்; மற்றுச், சிவஞானபோதமோ தொண்ணூற்றி ரண்டு பாக்கள் அல்லது முந்நூற்றறு பதடி களான் மட்டுமே அமைக்கப்பட்ட தொரு தனிச்சிறப்பு வாய்ந்த தாகும். சிவஞான போதத்தைப் போற் சொற்சுருங்கிய தொரு நூலும், அங்ஙனஞ் சுருங்கிய எல்லையிலே மிக விரிந்தாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/256&oldid=1591591" இலிருந்து மீள்விக்கப்பட்டது