உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் - 28

இவ்வாறாக, மக்களுயிர்க் குறுதிபயக்கும் இவ்வறு வகைப் பொருளாராய்ச்சியும் ஒன்றன்பின் ஒன்றாக முறைப் பட வைத்து, மெய்ம்மையுணரும் வேட்கைமிக்க நுண்ணு ணர்வினாரெல் லாருங் கழிபேருவகை துளும்பித் தெரிந் தேற்க இவ்விழுமிய சிவஞானபோத நூல் உண்மையான் ஆராயந்து விளக்கும் வகைகளெல்லாம் பின்னே தொடர்ந்து வரும் விரிவுரையிற் காணப்படும். இத்துணை ஆராய்ச்சி களையுந் தன்னகத்தே காண்ட இந்நூல் மிகப் பெரியதோர் அளவினதாய் இருக்க வேண்டுமென இதனைக் கண்டறியா தார் நினைப்பர். ஆனால், இதன் மிகச் சுருங்கிய அளவினைக் கண்டாரோ, ஆ! இத்துணை அரும்பெரும் பொருளும் ஒருங்குதெரிக்கும் இச் சீரிய நூல் அளவில் எத்துணைச் சிறியதாயிருக்கின்றதென எண்ணி யெண்ணி வியப்புறா நிற்பர்! னெனில், இந்நூல் பன்னிரண்டு சூத்திரங்களால் அமைத்திருக் கின்றது இப் பன்னிரண்டு சூத்திரங்களும் நாற்பதடிகளே யுடை யன; இந்நாற்பதடிகளிலும் இரு நூற்றுப் பதினாறு சொற்களேயுள்ளன. இனி, இப்பன்னி ரண்டு சூத்திரப் பொருளை விளக்கும் வெண்பாக்களோ எண்பதே யாகும்;

வெண்பது வெண்பாக்களும் முந்நூற்றிரு பதடிகளினால் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆகத், தொண்ணூற் றிரண்டு பாக்களிலே, அல்லது முந்நூற்றறு பதடிகளிலே கடவுள் உயிர் மலம் மாயை வினை வீடுபேறு என்னும் அறுவகைப் பொருள் களின் ஆராய்ச்சிகள் அத் துணையும் அடக்கி, அங்ஙனம் அடக்கியவாற்றாற் பொருள் மயங்குதற்குச் சிறிதும் இடனின்றி, அவற்றை அங்கையங் கனியெனத் தெளிய விளக்கி, அவை யிற்றின் உண்மையை முடித்துக் காட்டுவதென்றால், ஆ! அஃது ஒப்புயர்வில்லாத் தெய்வஅருள் நிரம்பப் பெற்றார்க்கன்றி ஏனையோர்க்கு எளிதின் வாய்க்குமோ? இத்துணைச் சுருங்கிய நூலிலே பரந்து விரிந்தாழ்ந்த பொருட் பரப்பத் துணையுஞ் செறிந்து துலங்கக் கண்டால், அஃதெவர்க் குத் தான் வியப் பினை விளைவியாது!

பண்டைச் செந்தமிழ் நூல்களிலே அறம்பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களின் றன்மைகள் அவ்வளவுந் தெரிந்தெடுத்துக் குயிற்றிய மணிக்கலன் என வயங்குந் தனிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/255&oldid=1591590" இலிருந்து மீள்விக்கப்பட்டது