உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி

236

மறைமலையம் 28

என

திருப்பாட்டின் பொருளை உற்று நோக்கித், திருவெண் காட்டுத் ரு க்கோயிலின் கண்ணவான மூன்று திருக்குளங்களில் மூழ்கியெழுந்து, சிவபிரானையும் அம்மையையும் வணங்கி வழிபடுவாரை விட்டு எல்லாத் தீவினைகளும் நீங்கும் எனவும், அவரைக் கொடிய பேய்களும் பீடியாவாய் அகலும் எனவும், அவர்க்குப் பிள்ளைப்பேறும் அவர் உள்ளத்திற் பெற விழைந்த வரங்களெல்லாமுங் கிடைக்குமெனவும், அவை அங்ஙனம் ஆகுமோ ஆகாவோவென ஐயமுறுதலும் வேண்டா வெனவும் இப்பாட்டின்கண் ஆசிரியர் தெளித்துக் கூறி யிருத்தலால், இதன்கட் சொல்லப்பட்டபடியே, நீவிர் நும் மனைவியாருடன் திருவெண்காடு சென்று, திருக் கோயிற் குளங்கள் மூன்றிலும் நீராடி யெழுந்து அம்மை யப்பரை வழிபட்டு வம்மின்கண்! நுமக்குப் பிள்ளைப்பேறு உண்டாதல் திண்ணம்,' வற்புறுத்திச் சொல்லினர். அவ்வாறே செய்வேமெனக் கூறி, அவரை வணங்கி விடைபெற்றுத் தம்மூர் சென்ற அச்சுத களப்பாளர் சில நாளிற் றம்மனைவியாருடன் திருவெண் காடு அடைந்தனர். திருவெண்காடு, சீகாழிக்குத் தென் கிழக்கே ஏழுகல் தொலைவிலுள்ளது. தம்மாசிரியர் கற்பித்த படி யே அச்சுதகளப் பளரும் அவர்தம் மனைவியாரும் அவ்வூரில் வைகி, அங்குள்ள திருக்குளங்கள் மூன்றிலும் நாடோறும் முறைப்படி நீராடி, ஆண்டுத் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் அம்மையப்பரை அன்பினால் உளங் குழைந் துருகி வணங்கி வழிபட்டு வராநிற்ப, அவர்தம் மனைவியார் கருக்கொண்டார். இறைவன் தமக்குச் செய்த அருட்டிறத்தை நினைந்து வியந்து பலகாலும் வணங்கி, அங்கிருந்தும் புறப்பட்டுத் தமதூர்க்குச் செல்லாமல், தம்மனைவியாரின் தாய் வீட்டுக்கே அவரை அழைத்துச் செல்லும்பொருட்டு, அச்சுதகளப்பாளர் மனைவி யாருடன் திருவெண்ணெய் நல்லூரே போய்ச் சேர்ந்தனர். தலைப் பிள்ளைப் பேற்றிற்குத் தாய்வீடு செல்வதே தமிழ்நாட்டு மகளிர்க்குள் வழக்க மாயிருத்தலின், அச்சுதகளப்பாளரும் அவ் வழக்கப்படியே தம் மனைவியாரை அவர்தந் தாய் வீட்டிற்கு அழைத்தே கினாரென்க.

L

சிலர் கருதுமாறு, மிகப் பெருஞ்செல்வரோன திருவெண் ணெய் நல்லூர்ச் சடையப்பப்பிள்ளை, அச்சுத களப்பாளரின் மனைவியோடு உடன்பிறந்தவரானால், இவ்விருவரும் அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/261&oldid=1591596" இலிருந்து மீள்விக்கப்பட்டது