உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

237

இல்லத்தில் எத்துணை வளத்துடன் இருந்தவராகல் வேண்டு மென்பதை யாங் கூறல் வேண்டா. அம்மையார் பத்தாந் திங்களில் ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றனர். திருவெண் காட்டிறைவர் திருவருளால் அம்மகவு பிறந்தமைபற்றி, அதற்குத் திருவெண்காடன் அல்லது சுவேதவனன் என்று பெயர் அமைத்தார்கள். வெண்காடன் என்பது தமிழ்ப்பெயர்; சுவேதவனன் என்பது அதற்கு நேரான வடமொழிப்பெயர். வெண்மையைச் சுவேதம் என்றுங், காட்டைவனம் என்றும் வடவர் வழங்குவர். மெய்கண்ட தேவர்க்குச் சுவேதவனன் என்னும் பெயர் போந்த காரணம் இங்ஙனமாதல் கண்டு கொள்க.

திரு

சுவேதவனப் பெருமான் எல்லாச் செல்வ வளங் களோடுந் ெ வண்ணெய் நல்லூரின்கண் உள்ள தந்தாய் மாமன் இல்லத்திலேயே வளர்ந்து வரலானார். எளிய நிலையிலுள்ள தாய் தந்தை தமையன்மாருந் தமதில்லத்தில் மகப் பேற்றிற் கென்று வருவிக்கப்பட்ட மகளை, மகப்பேறு எய்தியபின்னும் இரண்டோர் ஆண்டுகள் கழியும் வரையிற், கணவன் வீட்டுக்கு விடாமை ாமை தமிழ் மக்கட்குட் சிறந்த தொரு வழக்கமாய்க் காணப்படுகின்றது. எளிய மக்களுக் குள்ளேயே இவ்வழக்கம் இத்துணை வேரூன்றி நிற்கு மானால் எல்லாச் செல்வங்களும் ஒருங்குடையார்பால் இவ் வொழுகலாறு இன்னும் எத்துணை மிகுதியாய் ஆழ்ந்து நிலைபெற்று நிற்றல் வேண்டும்! ஆகவே, சுவேதவனப் பெருமான் திருவெண்ணெய் நல்லூரிற் றந் தாய்மாமனது மாளிகையிலேயே தம் அன்னையாருடன் னிதிருந்து வளரலானார் என்பதில் ஏதொருமாறுபாடும் இல்லை யென்க. இங்ஙனம் இவர்தம் அன்னையார் இவரைக் கருக் கொண்டவுடனே திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அவர் தந் தாய் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய் விடப்பட்ட மையும், அவர் அங்கே கருவுயிர்த்தபின் அவர் தம் மகவுடன் கணவன்மனைக்குச் செலுத்தப்படாமல் தாய் வீட்டிலேயே நெடுநாள் இருந்தமையும் அதனாற் சுவேதவனப் பெருமான் திருவெண்ணெய் நல்லூரிற் றந் தாய்மாமன் இல்லத்திலேயே வளர்ந்து வந்தமையும், பண்டு தொட்டுப் போதருந் தமிழர் தம் ஒழுகலாறாயிருப்பவும், இதனை யறியாதார், சுவேத வனப் பெருமான் திருவெண்காட்டுத் திருக்குளத்தின் படிக் கரையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/262&oldid=1591597" இலிருந்து மீள்விக்கப்பட்டது