உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் 28

கண்டெடுக்கப்பட்ட பிள்ளையென்றும், அங்ஙனங் கண்டெடுக் கப்பட்ட பிள்ளையாதல் பற்றி எவரோ பெற்றுக் கிடத்திப் போன பிள்ளையை அச்சுத களப்பாளர் வளர்க்கின்றார்! என ஊரவர் பழிகூறா நின்றன ரென்றும், அப்பழிக் கஞ்சித் தமதில்லத்திற்கு வந்த தம் மைத்துனர் பால் அம்மக வினைத்தந்து அதனை வளர்த்துக் கொள்ளுமாறு அச்சதகளப் பாளர் விடுத்தனரென்றுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் ஒருவர் வரைந்து விட்டனர்.3

3

அங்ஙனம் எடுப்புப்பிள்ளை எடுத்து வளர்க்குங் கருத்து டையரானால், அச்சுதகளப்பாளர் பெருஞ் செல்வராதலால், தமது வேளாள மரபிலேயே அழகிய ஒருமகவைப் பலரறியப் பெற்றுப், பழிச் சொல்லுக்கிடனின்றி அதனைத் தம்முடன் வைத்தே வளர்த்து மகிழ்ந்திருத்தல் கூடும். இங்ஙனஞ் செய்தலைவிடுத்துத் தங் குரவர்பாற் சென்று தேவாரத்திற் கயிறு செருகிப் பார்த்ததும், அதன்கட் டோன்றிய "பேய டை யா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை, வாயினவே வரம் பெறுவர்” என்னுந் திருஞானசம்பந்தர் திருபதிகப் பாட்டைக் கண்டுகளித்துத் திருவெண்காட்டிற்குத் தம் மனைவியுடன் ஏகி அதிற் சொல்லப்பட்டவாறே இறைவனை வழிபட்டதும் வீணாய் ஒழியும்; மேலும், அத் திருப்பாட்டின் பொருளை நம்பி வரங்கிடந்த அச்சுத களப்பாளர்க்கு அதிற் சொல்லப்பட்ட வாறே மகப்பேறு வாய்த்திலதாயின், அப் பாட்டின் பொருளில் நம்பிக்கை அறுதலோடு, திரு வெண் காட்டிறைவன்பாலும் அன்பு மிகாதன்றே? அத்துணைத் தவங்கிடந்துந் தம் மனைவியார் மகப்பெறுதல் இல்லையா யொழியக், கண்டெடுத்த வேறோர் அகதிப் பிள்ளைக்குத் திருவெண்காடன் அல்லது சுவேத வனன் எனப் பெயர் புனைதலிலும் அவர்க்குக் கருத்துச் செல்லாதன்றே? மற்று, அவர் தம் மகனுக்குச் சுவேதவனன் எனப் பெயர் சூட்டிய அன்பின் உறைப்பினை உற்றாராயுங் கால், அவர், தாங் கயிறிட்டுக் கண்ட தேவாரப் திருப்பதி கப்படியே மனைவியுடன் திருவெண்காடு சென்று, தவங் கிடந்து, அது புகன்றவண்ணமே திருவெண்காட்டிறைவர் திருவருளால் அவர் தம் மனைவி வயி று வாய்த்துச் சிறந்த ஓர் ஆண் மகவு ஈன்றமை நோக்கி,

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/263&oldid=1591598" இலிருந்து மீள்விக்கப்பட்டது