உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

239

இறைவன் பால் அளவுகடந்த அன்பு மீதூர்ந்தே சுவேதவனன் என அதற்குப் பெயரிட்டா ரென்பது நன்கு துணியப்படுமென்க.

அற்றேல், அவரைக் கண்டெடுத்த பிள்ளையென்று அங்ஙனம் ஒருவர் வரைந்த தென்னையெனின்; தவத்தாற் பெரிய சான்றோர் தாயின் கருப்பையிற் றங்கி ஏனைப் பொதுமக்களைப் போற் பிறந்தாரெனக் கூறுதலைக் குற்றமென அவர் கருதினாராகலின் அங்ஙனம் வரைந் திட்டார். அவர்போல்வார், சைவ சமயாசிரியரும் அவரோ டொத்த மாட்சியுடைய சந்தான குரவருந்தாயின் கருப் பையிற் றங்கிப் பெண்குறி வாயிலாப் பிறந்தாரெனக் கூற ஒருப்படாமல், அவரெல்லாம் இறைவன ருளால் அன்னை வயிற்றினின்று பிறவாமல் திடீரென ஓரிடத்திற் குழந்தை யாய்க் கிடந்தா ரெனக் கூறுதலையே சிறந்ததாகக் கருதி அங்ஙனமே வரைந்து விட்டிருக்கின்றார்.இவ்வாறு கூறுதல் உயர்ந்த எண்ணம் பற்றித் தோன்றிய தொன்றே யாயினும் அஃதிறைவன் நிகழ்த்தும் படைத்தற்றொழிலின் விழுப்பமும் நுட்பமும் உணராக் குறுகிய அறிவின் பான்மை யால் உண்டாயதாகலின், அதனை விரிந்த மெய்யறிவினார் ஏற்றுக் கொள்ளாரென்க. இவ்வுலகத்தில் உயிர்கள் தோன்றிய காலந்தொட்டு, அவையிற்றின் உடம்பு களை ஆண் பெண் சேர்க்கையினாலேயே இறைவன் தோற்று வித்து வருதல் காணப்படுதலின், தாயின் கருப்பையி னின்று மகவினைப் பிறப்பித்தலே இறைவன் அமைக்கும் அமைப்பாகு மன்றி, அதற்கு மாறாவதொரு தோற்றம், அவன்றன் அமைப் பாதல் செல்லா மையின், அஃது யாண்டந் தோன்றாதென்பதே திண்ணம். இந் நிலவுலகின்கண்ணே பற்பல தேயங்களில் ஆங்காங்குக் குழுமியிருக்கும் மக்கட் குழுவினரில் எண்ணிறந்த சான்றோர்கள் தோன்றியிருக்கின்றனர்; அவரெல்லாந் தாயின் கருப்பை யினின்றே பிறந்தாரல்லது பிறிதொரு வகையிற் றோன்றினா ரென்பது பெறப்படாமை யால், இறைவன் வகுத்த இவ்வகுப்புக்கு மாறக் பேசுதலே வழுக்குடைத்தாம். தாய் வயிற்றினின்று உயர்ந்த அறிவின ரைத் தோற்றுவித்தல்

மெனக் கண்டானாயின், இறைவன் அவர்களை அவ்வாறு பிறப்பியா னன்றே. எத்தனையோ சான்றோர்கள் தம் அன்னையின் கருப்பையிற் றங்கிப் பிறந்ததைப் பறிப்பதை நங் கண்ணெதிலே இஞ்ஞான்றுங் கண்டோமே காண்கின்றோமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/264&oldid=1591599" இலிருந்து மீள்விக்கப்பட்டது