உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 28

இறைவன் பலகோடி யாண்டுகளாகச் செய்து போதரும் ப்படைத்தற் றொழிலுக்கு மாறாக எக்காலத்திலாயினும் எவ்விடத்திலா யினும் ஒருவர் வேறொருவாற்றல் தோன்றியதை எவரேனும் மெய்பித்துக் காட்டல் முடியுமா? முடியாதே. அங்ஙன மிருக்க, இறைவன் நிகழ்த்தும் படைப்புக்கு மாறாக ஒருவர் தோன்றினாரென ஒருவர் ஒரு கதை எழுதினாரானால், அது வெறும் பொய்க் கதையே யாகுமல்லது, உண்மையுரைப்ப தாகாதென்க. மேலும், ஒரு பெரியார், தந் தாய் தந்தையரின் சேர்க்கையால் தாய் வயிற்றினின்றும் பிறந்ததைக் குறை வென நினைந்து, அவரை அங்ஙனம் பிறந்தாரெனக் கூறாமல், அவர் தெய்வத்தினருளால் திடீரென ஒரு சிறுமக வாய்க் குளக்கரையிற் கிடந்தாரெனக் கரைந்தால், உலகத்தார் அங்ஙனம் ஒரு நிகழ்ச்சியினை யாண்டும் எக்காலத்துங் கண்டதின்மையின், அக் கட்டுக்கதை யினை நம்பாமை யோடு, எவரோ களவிற் பெற்ற பிள்ளையை அங்கே கிடத்திப் போயினாரெனவே நுவல்வதுஞ் செய்வர். ஆகவே, தாய் வயிற்றினின்று பிறக்கும் இயற்கை நிகழ்ச்சியினைக் குற்ற மென நினைத்து, அதனை மறைக்க ஒருவர் பொய்யுரை யினைப் புனைந்து கட்டிவிட்டால், எவளோ இழிந்த குலத்தின ளான ஒரு கைம்மை களவிற் புணர்ந்து பெற்ற மகவை அங்ஙனங் கிடத்திப் போயினாளென அதனினுங் குற்றமாயதொரு பழிச்சொல்லே பரவா நிற்கும். இதற்குச் சான்று மெய்கண்ட தேவரைக் கண்டெடுத்த பிள்ளையெனக் கதை கட்டி விட்டவர் வரைந்த கதையிலேயே வந்து விட்டது; கண்டெடுத்த பிள்ளை யென்ற அளவிலே, எவளோ பழுதுடையாள் பெற்றுப் போகட்ட பிள்ளையை வளர்க் கின்றார். என ஊரவர் பழிகூறத் துவங்கியதாக ஒரு பொய்யு ரையும் அவரே கூட்டிச் சொல்ல வேண்டுவதானமையும் அவரெழுதியதிற் காண்க.

ன்னும், ஒரு பெரியார் தாய் வயிற்றிற் பிறவாமற் றிடீரென ஒரு சிறுமகவாய் ஒரு திருக்கோயிற் குளக்கரையிற் றோன்றினாரெனக் கிளக்கும் பொய்யுரையானது, இறைவன் எண்ணில் கோடி காலமாய் நடாத்திவரும் இயற்கைப் படைப்பு நிகழ்ச்சிக்கு முழுமாறாவதுடன், பண்டைப் பெரியாரான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/265&oldid=1591600" இலிருந்து மீள்விக்கப்பட்டது