உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

241

சுந்தரமூர்த்தி நாயனார் முதலான சைவ சமய குரவரின் மெய் வரலாற்றோடும் மாறு கொண்டொழி கின்றது. சமயாசிரி யரில் முதல்வரான மாணிக்கவாசகரே தாம் தாய் வயிற்றி னின்றும் பிறந்த வரலாற்றினைச் தாம் அருளிச்செய்த திருவாசகத்தின் போற்றித் திருவகவலில்

“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈரிடு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படுந் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

ஆண்டுக டோறும் அடைந்தஅக் காலை.

என நன்கெடுத்துக் கூறியிருக்கின்றார். அத்துணைச் சிறந்த முதலாசிரியரே தாந் தாய் வயிற்றிற் கருவாய்த் தங்கிப் பிறந்ததனை விரித்தெடுத் துரைத்திருக்கையில், அவரது பிறப்பினை அதற்கு மாறாகக் கூறுதல் பொருந்துமோ உரைமின்?

இனி,

மாணிக்கவாசகரைப் போலவே திருஞான சம்பந்தருந் தாய்வயிற்றில் கருவாய்த் தங்கிப் பிறந்தமை,

“பெருத்தெழும்அன் பாற்பெரிய நாச்சியா ருடன்புகலித்

திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக் கருத்துமுடிந் திடப்பரவுங் காதலியார் மணிவயிற்றில்

உருத்தெரிய வரும்பெரும்பே றுலகுய்ய உளதாக

என்று சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் அருளிச் செய்திருத்தலால் அறியப்படும். அங்ஙனமே, திருநாவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/266&oldid=1591601" இலிருந்து மீள்விக்கப்பட்டது