உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

  • மறைமலையம் - 28

கரையருஞ் சுந்தரமூர்த்திகளுந் தத்தந் தாய் வயிற்றிற் றங்கிப் பிறந்தமை அவ்வவர் வரலாற்றின் துவக்கத்திற் சேக்கிழாராற் கூறப்பட்டிருக் கின்றது. கடவுளைத் தாமே நேரே கண்டு அவரை ஏனை யோர்க்குங் காட்டிய தெய்வ ஆசிரியர்களே தாய் ஆ வயிற்றிற் றங்கிப் பிறந்து வளர்ந்து இறைவனரு ளொளியைப் பெற்று அதனைப் பெறுதற்குரியார் எல்லாரும் பெற்றுத் திகழச் செய்தனரென நம்முன்னாசிரியர் கூறியது, இறைவன் எல்லா உயிர்களையும் பிறவிக்குக் கொணரும் இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து நிற்க, அதற்கு மாறாக அவரெல்லாந் தாய் வயிற்றி னின்று பிறவாமலே இடை வெளியிற் றோன்றினா ரெனப் புகல்வது பொருந்துமாறு யாங்ஙனம்? அல்லதூஉம், அவரெல்லாந் தாய் வயிற்றி னின்றும் பிறப்பது குற்றமாயிற், பின்னர் அவர் நம்போல் ஊனுடம்பு உடையராதலுங் குற்றமாய் முடியும்; அதுவுங் குற்றமாயிற் பின்னர் அவர் நம்போற் பிறவி யெடுத்தா ரென்பதுங் குற்றமாகவே முடியும். ஆதலால், ஊனுடம்பு டையவர்களெல்லாரும் ஊனுடம்புடைய தாய் வயிற்றி லிருந்தன்றி வேறு வகையிற் பிறத்தலும், நம்மனோ ரிடையில் உலவுதலும் யாண்டுங் காணப்படாமையின், ஒரு பெரியார் தாய்வயிற்றி லிருந்தன்றி இ டைவெளியிற் றோன்றினாரெனக் கரைவது, இறைவன் எண்ணிறந்த காலமாகச் செய்துவரும் படைப்பி னியற்கைக்கு முழு மாறாவதுடன், மேலே காட்டியாங்குப் பல்வகைப் பழிச் சொற்கள் பரவுதற்குங் காரணமாம். எனவே, அங்ஙனங் கூறும் வரலாறு பொய்வரலா றாகுமென விடுக்க.

தோன்றிய

இனி, அச்சுதகளப்பாளரின் மனைவியார் தம் மணி வயிற்றினின்றுந் அவ்வாண்மகவு அழகிய வடிவுடைத்தாய்ச், சுவேதவனப் பெருமான் என்னும் பெயருடன் தாய் தந்தையராலும் அவர்தம் உறவினராலும் பேணி வளர்க்கப்பட்டுப், பிறைக்கொழுந்து வளர்வதென வளர்ந்து வரலாயிற்று. வளருந்தோறும் அப்பிள்ளையின் அறிவுஞ் சயலுங் கண்டாரெல்லாம் வியக்கும்படி சிறந்து தோன்றலாயின. தானிருக்கும் இடத்திலுந் தன்இல்லத்தைச் சூழ்ந்த இடங்களிலும் உள்ள ஒவ்வொரு பொருளையும் அவ்வப் பொருளின் இயற்கைகளையும் இயற்கைகளையும் உற்றுநோக்கி, அவற்றின் உண்மைகளைத் தம் பெற்றோரிடத்தும் மற்றோரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/267&oldid=1591602" இலிருந்து மீள்விக்கப்பட்டது