உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

243

டத்தும் உசாவி அறிவதில் அது வேட்கை மிகுதியும் உடைய தாயிருந்தது. அண்டை அயல் வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுங்காலும், மற்றைப் பிள்ளைகளைப் போற் கலாம் விளைத்துக் குறும்பு செய்வதிற் சிறிதும் மனஞ் செல்லாமல் மணலிற் பாடம் எழுதுதல் போலவும் மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அதற்கு இலையும் பூவுந் தூவி வணங்குதல் போலவுஞ் செய்து விளையாட்ட யர்ந்தது. தன்னோடொத்த பிள்ளைகளை யெல்லாந் தன் கீழ் வைத்துத் தான் அவர்க்குப் பாடங் கற்பிக்கு நிலையிலிருந்து ஏதேதோ சொல்வதைக் கண்டாருங் கேட்டாரும் “ஈது ஏதோ ஒரு தெய்வக் குழந்தையாக இருக்க வேண்டும்!” என வியந்து பேசினர். இவ்வாறாகத் தன் பெற்றார்க்கும் பிறர்க்கும் அளவிறந்த வியப்பினையும் மகிழ்ச்சி யினையும் பயந்து, இரண்டாண்டுகள் வளர்ந்து மூன்றாம் ஆண்டு துவங்கும் போது, ஒருநாள் நம் சுவேதவனப் பெருமான் வழக்கம் போலத் தனதில்லத்தையடுத்த இளமரக்காவில் மணலைக் குவித்து அதன்மேற் பூவும் இலையும் இட்டு அதனை வணங்கிய நிலையில் இருந்தனன். அந்நேரத்தில் அவ்விளமரக் காவில் இளைப்பாறுதற் பொருட்டு வந்த ஒரு துறவியார், அப் பிள்ளையின் நிலையைக் கண்டு பெரிதும் வியந்து நெஞ்சம் நெகிழ்ந்து அதன்பால் அணுகி அதனை உற்று நோக்க. அஃது எல்லாம்வல்ல அறிவாசிரியனாதற் குரிய தகுதி வாய்ந்திருத்தல் கண்டு, அதன் றலைமெற் றமது வலக்கையை வைத்துத், தம்பால் நிறைந்த சிவத்தின் அருளொளியைத் தமது கட்புலன் வழியே அப்பிள்ளையின் அறிவிற் பாய்ச்சி அதனைக் கிளர்ந்தெழச் செய்தார். பகலவன் மணியில் அவனது கதிரொளி பாய்ந்த வளவானே அது தீயினைக் காலுதல் போலவும், நிலாமணி முற்றத்தே நிலவொளி தோய்ந்த வளவானே அது நீரினைத் துளித்தல் போலவும், இயற்கையில் மாசற்ற பளிங்கிலே விளக் கொளி படின் அது சுடர்ந்து திகழ்தல் போலவுந் தூய அறிவு வாய்ந்த அப்பிள்ளையின் உயிரின்கண் அம்முனிவரின் சிவ வொளி ஊடுருவிப் பாய்ந்தவுடனே, அது சொல்லுதற்கரிய பேரறிவு விளக்கமுடையதாய்த் துலங்கலாயிற்று. அது கண்ட அம் முனிவர் பிரானார் தாம் தம் ஆசிரியன்பாற் பெற்ற மெய்ப் பொருளியல்புகளையும், உயிர் மாசு தீர்ந்து சிவத்தின் அருளிற்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/268&oldid=1591603" இலிருந்து மீள்விக்கப்பட்டது