உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் 28

அவற்றை

படிந்து சிவமாயிருக்கும் நிலைகளையும், எய்துதற்கான முடிந்த முறைகளையும் அப்பிள்ளையார்க்கு இனிதறிவுறுத்தி, “இவ்வுண்மைகளை எங்கும் பரவச் செய்து எல்லாரையுஞ் சிவநெறிக்கட் செலுத்திடுக!” எனக் கட்டளை

தந்து போயினரென்பது.

6

இங்ஙனம் நம் மெய்கண்ட பெருமானுக்கு மெய்ப் பொருள் அறிவுறுத்திச் சென்ற முனிவர் பெயர் இன்ன தென்பது, மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞான போதத் திற்குப் பாயிரமாக வைக்கப்பட்ட “மலர்தலை யுலகின் மாயிரு டுமிய" என்னுஞ் செய்யுளிற் குறிக்கப்பட வில்லை; அதன்கட் சொல்லப் பட்ட வரலாறு: நந்தியம் பெருமான் முனிவர் கூட்டத்திற்கு அருளிச் செய்த சிவஞான போதத்தை ஒரு நூலாகச் செய்துதவியவன் திருவெண் ணெய்நல்லூரிற் றோன்றிச் சுவேதவனன் என்னும் பிள்ளைத் திருப்பெயர் பூண்ட மெய்கண்டதேவன் என்னும் அத்து ஐணயேயாம்; அது,

“மயர்வற நந்தி முனிகணத் தளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்

பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்.

என்னும் அப்பாயிரச் செய்யுளின் இடைநின்ற பகுதியால் இனிது விளங்காநிற்கின்றது. சிவஞானபோதத்திற்கு அப் பாயிரச் செய்யுள் இயற்றினவர் மெய்கண்டதேவர்க்கு முதன் மாணாக்கரான அருணந்தி தேவரென்பது, சிவஞான போதத்திற்கு முதலுரையாசிரிய ராகிய பாண்டிப் பெரு மாளாற் குறித்துரைக்கப்பட் டிருக்கின்றது. மற்று அருணந்தி தேவரோ தாம் இயற்றிய சிவஞான சித்தியாரின் நூற் பொருள் வந்த வரலாறு தெரிக்கும் நூற்சிறப்புப் பாயிரச் செய்யுளாகிய "போத மிகுத்தோர் தொகுத்த பேதை மைக்கே” என்னுஞ் செய்யுளில்,

“இறைவன் அருள் நந்திதனக் கியம்ப நந்தி கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/269&oldid=1591604" இலிருந்து மீள்விக்கப்பட்டது