உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

குவலயத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு தீதகல எமக்களித்த ஞான நூலைத்

தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.”

245

என நுவலும் பகுதியில், இறைவன் நந்தியம் பெருமானுக்கு அருளிச் செய்த சிவஞான போதச் செம்பொருளை நந்தி தேவர் தம் மாணாக்கர் சனற்குமார முனிவர்க்கு அறிவுறுத்த, அச் சனற்குமாரர் தம் மாணாக்கரான மெய்கண்ட தேவர்க்கு அதனை அறிவுறுத்த, மெய்கண்டதேவர் தம் மாணாக்கராகிய தமக்கு அதனை ஒரு நூலாகச் செய்து கொடுக்க, அதற்கு வழி நூலாகச் சிவஞானசித்தி எனப் பெயர் தந்து இந்நூலை இயற்றலாயினேன் எனப் பகர்ந்திருக்கின்றனர். சிவஞானபோதப் பாயிரச் செய்யுளில் நுவலப்படாத “இறைவன் அருள் நந்தி தனக்கியம்பியதும், நந்தி கோதில் அருட் சனற்குமாரர்க்குக் கூறி யதும் புதியவாக புதியவாக அருணந்தியார் பாயிரச் செய்யுளிற் காணப்படுகின்றன; ஆகவே, இவையிரண்டுஞ் சிவஞா னபோதம் மெய்கண்ட தேவரால் இயற்றப்பட்ட காலத்தில் வழங்கவில்லை யென்ப தூஉம், மற்று இவை அருணந்தி தேவராலோ அல்லதவர் காலத்திருந்த ஏனைப் பிறராலோ புதியவாய்க் கட்டிச் சேர்க்கப்பட்டன வாமென்பதூஉம், மெய்கண்ட தேவர்க்குச் சிவஞான போதப்பொருள் அறி வுறுத்திய ஆசிரியர் பெயர் சிவஞான போதப் பாயிரச் செய்யுளிற் குறிக்கப்படா திருக் கவும் அவரது பெயர் சனற்குமாரர்' என அருணந்தியார் புகன்றது அவரை வடநாட்டு முனிவர ராக்குதற் பொருட்டுச் செய்த புனைந்துரை யேயா மென்பதூஉம் மெய்ச் சான்றுகளின் வழியே நடுநின்று ஆராய்வாரெவர்க்குந் தெற்றென விளங்கற்பாலன வேயாம்.

அற்றேல், அருணந்தியார் சிவஞான போதத்திற்குத் தாம் உரைத்த பாயிரச் செய்யுளில் இறைவன் நந்திதேவர்க்குச் சிவஞானபோதப் பொருளை அறிவுறுத்தினானெனவும், கூறாமல், தாமியற்றிய சிவஞானசித்திப் பாயிரச் செய்யுளின் மட்டும் அவ்வாறு கூறியதென்னை யெனின்; இதற்கு வகையில் விடை கூறலாம். பாண்டிப்பெருமாள் குறிப்பித் தவாறு, சிவஞான போதத்திற்குப் பாயிரச் செய்யுள் உரைத்தவர்

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/270&oldid=1591605" இலிருந்து மீள்விக்கப்பட்டது