உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் - 28

அருணந்தியாரேயாயின், அவர் அங்ஙனம் அதன்கட் கூறியதற்கு முரணாகத் தமது சிவஞானசித்திப் பாயிரச் செய்யுளில் வேறு கூறார்; அதனாற், சிவஞான போதத்திற்குப் பாயிரம் உரைத்தார் அருணந்தியாராதல் கூடாது. பாண்டிப்பெருமாள் இருந்த காலம் மெய்கண்ட தேவர்க்குச் சிறிதேறக்குறைய நூறாண்டுகள் கழிந்த பின்னர்த்தென்பது, அவர் சிவஞானபோதத்திற்கு எழுதிய உரையில், உமாபதிசிவனார் இயற்றிய சிவப்பிரகாச நூற் செய்யுட்களை ஆங்காங்கு மேற்கோளாக எடுத்துக் காட்டி யிருத்தல் கொண்டு துணியப்படும்4. சந்தான குரவர் நால்வரில் இறுதிக்கண் நின்ற உமாபதி சிவனார்க்கும் பிற்பட்டிருந்த பாண்டிப்பெருமான், சிவஞானபோதப் பாயிரச்செய்யுள் இயற்றினார் அருணந்தி தேவரே என்பதனை யாங்ஙனங் கண்டனரோ அறிகிலம். மெய்கண்ட தேவர்க்கு முதன் மாணவர் அருணந்தியாராதல் கொண்டு, அவரே அந் நூலுக்குப் பாயிரமுரைத்தாரெனக் கருதினர் போலும்! மற்றுச், சிவஞான முனிவர் தாம் சிவஞான போதத்திற் குரைத்த உரையுட், சிவஞான போதப் பாயிரச் செய்யுள் இயற்றினார் அருணந்தி தேவர் எனக் கிளவாமையின், அப் பாயிரச் செய்யுள் கூறினார் அருணந்திதேவரே என்னும் பாண்டிப் பெருமாள் கூற்று ஐயுறற்பால தொன்றா யிருக்கின்றது.

இனிச், சிவஞானபோதப் பாயிரச் செய்யுள் கூறினவர் உண்மையை உள்ளவாறு நுவலும் உளப்பான்மையுடைய ராகக் காணப்படுகின்றார். அருணந்தியாரோ உண்மையை ஒரோ விடங்களில் மறைத்து வடமொழியாளர் புனைந்து கட்டிய புனைவுபொருளின் வழிச் செல்பவராகவுங் காணப் படுகின்றார். பொருளுண்மை யுணர்வதில் மிகுந்த வேட்கை யும் ஆராய்ச்சி யறிவும் நடுவுநிலைமையும் வாய்ந்தார்க்குச் சைவசித்தாந்தக் கோட்பாடுகள் இயற்கையில் விளங்கற் பாலனவேயாம். சைவசித்தாந்த நூல்களையும் அவற்றின் கொள்கைகளையுஞ் சிறிதுமே அறியாத மேல்நாட்டா சிரியர்களில் எத்தனையோ பேர் சைவசித்தாந்தத்தோடு ஒத்த கோட்பாடுகளை விளக்கி யெழுதியிருக்கின்றனர், விளக்கி யெழுதிவருகின்றனர். அவர்க் கெல்லாம் இறைவன் நேரே தோன்றி அவை தம்மை அறிவுறுத் தினான் என்னுங் கதை வழங்கக் கண்டிலம். இக் காலத்தில் நம்

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/271&oldid=1591606" இலிருந்து மீள்விக்கப்பட்டது