உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

247

நாட்டவரறியாத, கனவினுங் கண்டிராத எத்தனையோ புதுமைகளை யெல்லாம் மேனாட்டறிஞர்கள் நாளும் நாளுங் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றனர். முதலில் நீராவியின் ஆற்றலைக் கண்டு, அதனைப் பயன் படுத்தி இந்நிலவுலகம் எங்கணும் புகைவண்டித் தொடரையும் இன்னும் எத்தனையோ வகையான பொறிகளையும் மேனாட்டறிஞர் களே இயக்கி மக்களுக்கு அளவிறந்த நன்மைகளை விளைத்து வருகின் றார்கள். இன்னும் இங்ஙனமே நீராற்றல் மின்னாற்றல் முதலா னவைகளையும் புதிய புதியவாய்க் கண்டறிந்து மேனாட் டறிஞர்களே அவையிற்றை உலகிற்குப் பயன்படுத்தி வருகின்றார்கள், அம்மறைந்த ஆற்றல்களி ஆற்றல்களிலெல்லாந்த தினைத்தனையாயினும் இறைவன் நம்

மறை

நாட்டவர்க்கு

அறிவுறுத்தின துண்டோ? இல்லையே, இன்னோரன்ன பாருணுட்பங்களையெல்லாம் மக்களுள் அறிவும் முயற்சியும் ஆராய்ச்சியும் உடையார் தாமே கண்டறிந்து பயன்படுத்தத் தக்கவராயிருக்கும் போது, இவற்றினும் பலபடியால் எளிதில் அறிதற்கு இசைந்தனவான சைவ சித்தாந்தக் கொள்கைகளை மட்டும் மாந்தர் அறியா திருப்ப, இறைவனே அவருட் சிலர்க்கு நேரே போந்து அவை தம்மை அறிவுறுத்தினானெனக் கிளக்குமுரை யாங்ஙனம் பொருந்தும்? ஒவ்வொரு பொருளின் இயல்புகளையும் மக்கள் தமதறிவை உய்த்து ஆய்ந்துதெளிந்து உறுதி கூட வேண்டு மென்பதே இறைவன் திருவுளக் குறிப்பாகுமன்றி, அவர் தமதறிவை ஊக்காது மட்டிகளாய் மடிந்து கிடப்ப அவர்க்கு அவையிற்றை அவனே வலிந்துவந் துணர்த்துதல் அவன்றன் திருவுளக் குறிப்பாகாது. அதனாற், சிவஞானபோதத்திற்குப் பாயிரச் செய்யுள் உரைத்த ஆசிரியர், இறைவனே சிவஞானப் போதப் பொருளை நந்தியெம்பெருமானுக்கு அருளிச் செய்தா னெனப் பொருந்தாவுரை கூறிற்றிலர். மற்று, அருணந்தியாரோ வடமொழியாளர் மதத்தின்பாலராய் இறைவனே அதனை நந்தியெம் பெருமானுக்கு அருளிச் செய்தானென வொரு பொருந்தாவுரை புனைந்து விட்டார். இன்னுஞ், சிவஞான போதப் பொருளை நந்திதேவர்பாற் கேட்ட ஒரு முனிவர் மெய்கண்டதேவர்க்கு அதனை அறிவிக்க, மெய்கண்டதேவர் தமது கூர்த்த அறிவால் அதனைப் பலவாற் றானும் ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/272&oldid=1591607" இலிருந்து மீள்விக்கப்பட்டது