உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

264

மறைமலையம் - 28

விடுத்து, மெய்கண்ட தேவரையே செருக்குடன் எதிர் நோந்கி, ஆணவமலத்தின் உண்மை நிலை யாது?” என்று தலையசைப் புடன் வினவினர். அதற்கு, மெய்கண்டதேவர் ஏதும் விடை பகராமல், “நீர் இங்ஙனம் இறுமாந்து நின்று வினவும் இந்நிலையே ஆணவமலத்தின் உண்மை நிலையாகும்”, என்று குறிப்பால் உணர்த்துவார், தம்முடைய அழகிய அருட் கண்களால் அருணந்தியாரை ஏறெடுத்துப்பார்த்துப், பின் அப்பார்வை யினை அவரது முடியிலிருந்து அடிவரையிற் சலுத்தி வாளாதிருந்தனர். அருணந்தியார் சைவ சித்தாந்த நுண் பொருளுணர்ச்சி நன்கு கைவரப்பெற்று, அதன் முடிந்த நிலையை மெய்க்குரவன்பாற் பெறுந்தகுதி வாய்ந்த பெரியா ராயிருந்தமையின், தாம் நின்ற ஆணவநிலையைத் தமக்குத் திருநோக்கக் குறிப்பினாலேயே உணர்த்திய மெய் கண்டாரின் மெய்யாசிரிய நிலையை உடனே நன்குணர்ந்து, உளம் நெக்குநெக்குருகக் கண்களில் நீர் ஆறாய்ப்பருக அன்பினால் அவர்தந் திருவடிகளில் வீழ்ந்து, “ஏழையேஞ் செய் தவத்தால் எம்மை யாட்கொள்ள எழுந்தருளிய சிவஞானச் செல்வமே! எளியேன் ஆணவத்தால் மயங்கிச் செய்த பெரும்பிழையைப் பொறுத்தருளி, அடியேற்கு முடிந்த அழியாப் பெருநிலையை அறிவுறுத்தருளி, அடியேனைத் தேவரீர் திருவடித்தொண்டுக்கு ஆளாக்கி யருள் செயல் வேண்டும்" என அழுதுரைத்தார். அன்பினால் அகங்கரைந்துருகிய அருணந்தியார் முடிமீது, மெய் கண்டார் தம் திருக்கையினை வைத்து அருள்செய்து, அவர்தஞ் செவியினுள் முடிந்த சிவமறையினை ஓதி அவரைத் தமக்கு மாணவராக ஏற்றருளினார்.

அதன்பொருண்

.

அதன்பின் மெய்கண்டார் தாம் அருளிச்செய்த நூலை அருணந்தியார்க்கு அளித்து முற்றும் அவர்க்குத் தெளித்தெடுத்தறிவுறுத்தி, "இச் சிவஞானபோத நூலுக்கு ஒரு வழிநூல் செய்திடுக!" என்று கட்டளையுந் தந்தருளினார். அருணந்தியார் அக் கட்டளையினைத் தம் முடிமேல் ஏற்றுச், சிவஞானபோதத்திற்கு விரிந்த ஓருரை போலச் 'சிவஞானசித்தியார்' எனப் பெயரிய சிறந்த வழி நூலை இயற்றி அந்நூற் பொருளைத் தம்மாணவர் பலர்க்கும் நன்கறிவுறுத்தி, அதனையுந் தம்மாசிரியர் அருளிச்செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/289&oldid=1591624" இலிருந்து மீள்விக்கப்பட்டது