உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

263

பருவத்தின ராயிருக்கும் மெய்கண்ட தேவர் சைவசித்தாந்தப் பொருள் விளக்கஞ் செய்துவருதலைக் கேள்வியுற்றுப் பெரிதும் வியப் பெய்தி, அப்பிள்ளையாரை அணுகி அவர் தந் திருவடிகளைத் தொழுது, அவர் அறிவுறுக்கும் மெய்ப்பொரு ளுரைகளைச் செவியாராப் பருகி, இதற்குமுன் தாம் அறியாமலும் ஐயுற்றுந் தியங்கிய பொருட்டன்மைகளை அறிந்தும் ஐயந்தெளிந்தும் மெய்யு ணர்வின் பத்திற் றிளைத்த வண்ணமாய்ப் பிள்ளை யாரைப் பிரியாமல் இருந்து மேன்மேன் மெய்யறிவு பெற்று வரலானார்.

இவ்வாற்றால் தம் மாணவர் குழாம் நாளுக்கு நாட் குறைந்துவர, அதனைக் கண்ட அருணந்தியார் அதற்குக் காரணம் என்னென்று எஞ்சிய தம் மாணவரை வினாவ, அவர் அம்மற்றை மாணவரெல்லாம் மெய்கண்டதேவர் பாற் சென்று மெய்யுணர்வு பெற்றுவருஞ் செய்தியினை எடுத்தி யம்பினார். அது கேட்ட அருணந்தியார், பிள்ளைமைப் பருவத்தினரான மெய்கண்டார் அறிவு நூற்பொருள் விளக்கஞ் செய்கின்றார் என்னுஞ் செய்தியில் ஐயமும் வியப்பும் தமதுள்ளத்தை ஒருபுறங் கதுவத், தம் மாணவர் பலர் தம்பான் மெய்ப்பொருள் கேட்டு வருதலை விடுத்து மெய்கண்டார்பால் அதனைக் கேட்கப் போயினார் என்னுஞ் செய்தியில் அழுக்காறுஞ் சினமுந் தமதுள்ளத்தை மற்றொரு புறங் கதுவத், தாமே அச் செய்தியின் மெய்ம்மையினை நேரிற் கண்டறிதற் பொருட்டு ஒருநாள் திருவெண்ணெய் நல்லூர்க்கு ஏகி, மெய்கண்டதேவர்பாற் சென்றனர். அருணந்தியார் வந்த நேரத்தில், மெய்கண்டதேவர் தம்மெதிரே குழுமியிருந்த மாணவர்க்கு ஆணவமலத்தின் இயல்புஞ் செயலும் எடுத்து விரித்து விளக்கிக் கொண்டிருந் தனர். அருணந்தியாரின் வருகையைக் காண்டலும், அங்கிருந் தாரில் முன்னே அருணந்தியார்க்கு மாணவ ராயிருந்தார் பலரும் எழுந்து அவரை வணங்கினர். அருணந் தியார் உடனே அவர்களை நோக்கி, “இப்போது எதனைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?" என வினவ, அவர்களுள் ஒருவர், ஆணவமலத்தின் இயல்பையுஞ் செயலையும் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்” என்று பணிவுடன் விடை கூறினார். அவ்வளவில் அருணந் தியார் அவர்களுடன் உரையாடுதலை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/288&oldid=1591623" இலிருந்து மீள்விக்கப்பட்டது