உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

262

மறைமலையம் - 28

வராகலின், அவர் அந் நூற்குத் தாங் கருதியவாறு ஓர் ஏற்றங் கற்பித்தற் பொருட்டே, அது சிவபிரான் கையிலிருந்த தென்றும் அதனையே இறைவன் திருவாதவூரர்க்கு அறிவுறுத்தருளினா னென்றும் நிகழாத தொன்றை நிகழ்ந்த தாக வைத்துப் படைத்து மொழிந்திட்டார். ஆனால், இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்த பெரும்பற்றப் புலியூர் நம்பியோ பெயரளவாக வேனுஞ் சிவஞானபோத நூலைத் தமது திருவிளையாடலில் யாண்டுங் குறிப்பிடா மையின், மெய்கண்ட தேவர்க்குமுன் சிவஞான போத நூலைத் தமது திருவிளை யாடலில் யாண்டுங் குறிப்பிடா மையின், மெய்கண்ட தேவர்க்குமுன் சிவஞான போதம் எனப் பெயரிய நூல் ஏதும் இருந்திலாமை தேற்றமேயா மென்க. எனவே, சிவஞானபோதம் எனும் நூலை முதன் முதல் அருளிச் செய்தவர் மய்கண் தேவரே யல்லாமல் வேறெவரும் அல்லரென்பது துணிபொருளாகப் பெறப் படுதல்

காண்க.

ங்ஙனமாகச் சிவஞானபோதம் என்னுஞ் செம்பொரு ணூலை முதன்முதல் இயற்றியருளிய மெய்கண்டதேவர் பிள்ளைமைப் பருவத்திலேயே எல்லாம்வல்ல அறிவு நூலாசிரி யராய்த் திகழ்தல் உணர்ந்த அறிஞர் பலரும் அவரையணுகி வணங்கித், தாங்கேட்டுத் தெளிய விழைந்த அறிவு நூற் பொருள்கள் பலவும் அவர்பால் உசாவி ஆராயலாயினர். அதனால் மெய்கண்டதேவரின் பொன்றாப் புகழ் இத் தென்றமிழ் நாடெங்கணும் பரவி ஒளிரலாயிற்று.

இவ்வாறு நிகழ்கையில், மெய்கண்டதேவர் பிறந் தருளிய குடும்பத்திற்குக் குருவும், வடமொழிக்கண் உள்ள சிவாகமங்க ளெல்லாம் ஒருங்கே ஆராய்ந்து தெளிந்து வல்லராய் விளங்கிய காரணத்தாற் சகலாகம பண்டிதர் எனச் சிறப்புப்பெயர் வாய்ந்தவருந் திருவெண்ணெய் நல்லூர்க்கு அணித்தான திருத்துறையூரில் வாழ்ந்தவருமான அருணந்தி சிவாசாரியார் என்னுந் திருக்கோயில் அந்தணர் சிவாகம முடிபொருளான சைவசித்தாந்தப் பொருள்களைத் தம் மாணாக்கர்க்குச் செவியறிவுறுத்தி வந்தனர். அங்ஙனம் அவர்பாற் சைவ சித்தாந்தப் பொருளுணர்ச்சி பெற்றுவரும் அவர் தம் மாணவரிற் பலர் திருவெண்ணெய் நல்லூரிற் பிள்ளைமைப்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/287&oldid=1591622" இலிருந்து மீள்விக்கப்பட்டது