உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

66

261

தொழுமே" எனக் கூறிமுடிக்க, வடமொழிப் பன்னிரண்டாஞ் சூத்திரமோ அதற்கு மேலும், ங்ஙனமாகச் சிவஞான போதத்திற் சைவ சித்தாந்தப் பொருண்முடிபை அறிந்து கொள்க என வேறொன்று சேர்த்துக் கூறி முடிக்கின்றது; இப் பெற்றியினை உற்று நோக்குங்கால், அவ் வடமொழிச் சூத்திரங்கள் பன்னிரண்டுந் தமிழ்ச் சிவஞான போதச் சூத்திரங்கள் பன்னிரண்டன் ன் மாழி பெயர்ப்பாதல் பொள்ளெனப் புலனா நிற்கும்.

என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்தவாற்றால், தமது பிள்ளைமைக் காலத்திலேயே தம் ஆசிரியன்பாற் சைவ சித்தாந்த முடி பொருளுணர்ந்த மெய்கண்ட தேவர், தாங் கண்ட அம் முடிபொருளுக்கு மாறாக வடமொழி தென் மொழிப் போலிச் சமயநூல்கள் முப்பொருட் டன்மைகளை முன்னொடு பின் மாறு கோளுறப் புரட்டிக் கூறுதல் கண்டு, உலகத்திற்கு மெய்ப்பொருள் தேற்றுவானெழுந்த அருட் பெருக்காற் சிவஞானபோத நூலை இயற்றியருளினா ரல்லது, அத்தகைய தொரு நூல் வட மொழியி லிருப்பக் கண்டு அதனைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தா ரல்லரென்பது நன்கு பெறப்படுதல் காண்க.

இனி, மெய்கண்ட தேவர் சிவஞானபோதம் அருளிச் செய்தற்கு முன், அப் பெயர் கொண்ட நூல் ஒன்று வட மொழியிலாதல் தென்மொழியிலாதல் இருந்ததென்பதற்குச் சான்று ஏதுமில்லாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. மாணிக்க வாசகர்க்கு இறைவன் அறிவுறுத்தியது சிவஞான போதமே யென்று பரஞ்சோதி முனிவர் தாமியற்றிய திருவிளையாடற் புராணத்துங், கடவுண் மாமுனிவர் தாமியற்றிய திருவாதவூரர் புராணத்துங், கூறினாரேனும், இவ்விருவர்க்கும் பல நூற்றாண் டுகள் முற்பட்டிருந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி அங்ஙனம் இறைவன் மாணிக்க வாசகர்க் குணர்த்தியது சிவஞான போதம் எனக் கூறாமை யானும், இறைவனவர்க் கறிவுறுத்திய தெல்லாம் ஐந்தெழுத் துண்மையேயெனக் கூறுதலானும் பிற்காலத் திருந்த அவ்விரு வரையுங் கொள்ளற் பாலனவல்ல. அவ்விருவரும் மெய் கண்ட தேவ நாயனார்க்குப் பல நூற்றாண்டுகள் பின்னே யிருந்து அவரருளிச் செய்த சிவஞானபோத நூலைப் பயின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/286&oldid=1591621" இலிருந்து மீள்விக்கப்பட்டது