உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

L

260

  • மறைமலையம் - 28

உயிரினாற் செய்யப்பட்ட வினைகளே ஓர் உருவு கொண்டு மறித்து மறித்தும் உயிர்களைத் தோற்றுவித்துப் பிறவிகளில் உய்க்குமென நுவல்வனவும், உலகமும் உலகத்திற்கு முதலான மாயையும் இல்பொருள்களே யாமெனப் பகர்வனவும், உயிர்களுக்கு உலகியற் பொருள்களும் அவற்றிற்கு முதலான மாயையுமே அறியாமையினைத் தருவனவாமெனக் கூறுவனவும், அறியாமை யென்பது ஒளியின் எதிர் மறையான இருள் போல் அறிவின் எதிர் மறையாவதல்லது அஃதோர் உள் பொருளாகாதென உரைப்பனவும், இம்மையில் நுகருமின் பத்தைத் தவிர மறுமைக்கட் பெறும் இன்பமொன்றில்லை யெனக்கிளப்பனவும், இப் பிறவியொழிந்தால் இனிப் பிறவியொன்றில்லையென இசைப்பனவும், ஈகை அறம் தவம் திருவுருவ வழிபாடு முதலியன வெல்லாம் மடவோர்க் குரியவென இயம்புவனவும் ஆகி மக்கட்குத் திரிபுணர்ச்சி யினைப் பயந்து, அவரது பிறவியினைப் பாழாக்கு வனவாய் இருத்தல் கண்டே, ஆசிரியர் மெய்கண்ட தேவர் அவர்மேல் வைத்த பேரிரக்கத்தால், அந் நூற்பொருள்களின் இகல றுத்து, முப்பொருள் உண்மைகளை அளவை நூன் முறையில் முன்பின் றொடர்புபட வைத்துத் தெள்ளித் தெளித்துச் சிவஞானபோதச் செம்பொருணூலைச் செந் தமிழ்த் தெய்வ மொழிக்கண்ணே இயற்றியருளினாரென்று கடைப் பிடித்து ணர்ந்து கொள்க.

இவ்வாறு மெய்கண்டதேவ நாயனாரால் இயற்றி வைக்கப்பட்ட சிவஞானபோதத்தின் ஒப்புயர்வில்லாத் தனிப்பெருஞ் சிறப்பைக் கண்ட வடமொழிப்பற்றுடை எவரோ ஒருவர், அதன்கண் உள்ள சூத்திரங்கள் பன்னி ரண்டை மட்டும் வடமொழியில் மொழிபெயர்த்து வைத் திட்டார். அங்ஙனம் வடமொழியில் மொழிபெயர்த்து வைப்பினுந், தாம் மொழிபெயர்த்த சூத்திரங்கள் பன்னி ரண்டுஞ் சிவஞான போதத்தின்கண் உள்ள வாய்மையினை மறையாது விளம்பி விடல் வேண்டித் தாம் மொழி பெயர்த்த பன்னிரண்ட ாஞ் சூத்திரத்திறுதியில், "இங்ஙனமாகச் சிவ ஞானபோதத்திற் சைவதித்தாந்தப் பொருண் முடிபை அறிந்து கொள்க”” என்று அம் மொழிபெயர்ப்புக்காரர் உண்மையைத் திறந்துஞ் சொல்லிவிட்டார். மெய்கண்ட தேவர் அருளிச் செய்த பன்னிரண்டாஞ் சூத்திரம், “ஆலயந்தானும் அரன் எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/285&oldid=1591620" இலிருந்து மீள்விக்கப்பட்டது