உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

259

அற்றேல், உபநிடத காலத்தாரியர் சிவஞான போதச் செம்பொருள் காணமாட்டதவரேயாயினும், அவர்க்கு மெய்யறிவு தெருட்டிய தமிழ்வேந்தர் பெருமக்களே தாம் அறிந்த வடமொழியிற் சிவஞான போதத்தை யியற்றி வைத்தனராக, அதனை வடக்கிருந்து கொணர்ந்த ஒரு தமிழ் முனிவரே அதனை மெய்கண்டதேவர்க்கு அறிவுறுத்துச் செல்லப் பின்னரதனை மெய்கண்டதேவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தாரென உரையாமோ வெனின்; உரையா மன்றே; என்னை? அங்ஙனம் உரைத்தற்கு மெய்கண்ட தேவரருளிச் செய்த சிவஞானபோத நூலிலாதல், அதன் முகத்து வைக்கப்பட்ட சிறப்புப்பாயிரச் செய்யுளிலாதல், ஏதொரு சான்றுங் காணாமையினென்பது, இது முன்னுங் காட்டினாம்.

காட்டியவாற்றால், "நந்தி

முனி

என்றிதுகாறுங் கணத்தளித்த உயர் சிவஞான போதம்” என்ற மாத்திரை யானே, அது வடமொழியில் இயற்றப்பட்டதோர் அறிவு நூலாகத்தான் இருத்தல் வேண்டும் என்றும், வட நாட்டில் அஞ்ஞான்றிருந்த மாந்தரனைவரும் வடமொழி பேசிய ஆரியரேயாவர் என்றுங் கரைவாருரை பொருந்தாமை இனிது விளங்கா நிற்கும். அந்நாளில் வட நாடெங்கணு மிருந்தவர் தமிழ் மக்களே யாவரென்றதூஉம், அவர் அப் பழங்காலத்தும் வழங்கியது தமிழ் மொழியே யாமென்ப தூஉம் ஆராய்ச்சி வல்ல நடுநிலையாளர் இஞ்ஞான்று ஆய்ந்து நிறுவியிருக்கும் அரும் பேருண்மை களேயாமென்று கடைப்பிடிக்க.

சிவஞானபோதத்தின்கட் காணப்படுங் குறிப்புகள் கொண்டு அந்நூல் மெய்கண்ட தேவராலேயே முதன் முதல் தமிழில் இயற்றப்பட்ட வகையினை மேல் எடுத்து விளக்கினாம். தங்காலத்துக்கு முன்னிருந்த வடமொழி தென்மொழி அறிவு நூற் பொருள்கள் பெரும்பாலன ஒரு துறைப்பட்டு நில்லாவாய் முன்னொடுபின் பெரிது முரணி அளவை முறைபிறழ்ந்து, கடவுள் இல்லையெனக் கரைவனவுங், கடவுள் அல்லாத வற்றைக் கடவுள் எனக் கட்டிக் சொல்வனவும், உயிர் என்று ஒரு முதல் இல்லை உணர்வு களின் தொகுதியே அதுவாமெனக் கிளப்பனவும், உணர்வு கள் அழிய உயிர் இலவாமேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/284&oldid=1591619" இலிருந்து மீள்விக்கப்பட்டது