உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மெய்யறிவு ச்

மறைமலையம் - 28 சுடர்கொளீஇ

அவர்களைத் திருத்துதற் பொருட்டுப், பண்டைத் தமிழ்ச்சான்றோர் சிலர் அவ்வேதங் களின் இடையிடையே யியற்றிச் சேர்த்திருக்குஞ் சிற்சில பதிகங்களின் மட்டுமே இறைமுதற் பொருளாகிய உருத்திரரின் வணக்கமும் மற்றுஞ் சில உயர்ந்த கருத்துகளுங் காணப் படுகின்றன. இதனால், வேதகால ஆரியர் ஒரு தெய்வ வணக்கமும் அருளொழுக்க மும் மெய்யுணர்வும் ஒருசிறிதும் உணராப் பேதை மாக்க ளாதல் தெளியப்படும். இப்பெற்றியரான இவர் பானின்றுஞ் சிவஞானபோதச் செம்பொருள் போந்த தெனக் கூறுவாரு ரையினும் ம மை மிக்கது பிறிதில்லையென்க.

னி, வேதகாலத்திற்குப்பின், வெறியாட்டு வேள்விகள் வேட்கும் வகையினை வறிதே விரித்துச் “சதபதபிராமணம், ஐதரேயபிராமணம்” முதலான பிராமணங்கள் இயற்றப் பட்ட காலத்திருந்த ஆரியரும், ஊனுங் கள்ளும் விடாராய், ஆண் மக்களையுங் கொலை செய்து அவரது இறைச்சி யினையும் அயின்ற வன்னெஞ்சக் கொடியராகக் காணப் படுதலால், அவர் பானின்றுஞ் சிவஞானபோதச் செம் பொணூல் போந்த தெனக் கரைவாரினுங் கயவர் பிறர் இலர்.

இனி, வேதகால பிராமணகாலங்கட்குப் பிற்பட்ட உப நிடத காலத்திருந்த ஆரிய முனிவர்களோ, தமிழ்ச் சான்றோரின் அறவுரைகேட்டுப் பழைய வெறியாட்டு வேள்விகளை அறவே கைவிட்டவர்கள்; அவ்வேள்வி களையும் அவற்றிற் போந்த சிறுதெய்வ வணக்கத்தையும் அவ்வணக்கவுரை மலிந்த அவ்வேத நூல் பிராமண நூல் களையும் மிகவே பழிப்பவர்கள். இது முண்டகோபநிடதத் தின் கட்கண்டுகொள்க. மேலும், இவ்வுப நிடத காலத்து ஆரிய முனிவர்கள், அஜாதசத்துரு, ஜனகன், அசுவபதி கைகேயன் முதலான மெய்யுணர்வுமிக்க தமிழ் வேந்தர் களால் மெய்யுணர்வு தெருட்டப்பட்ட வரலாறுகள் பிருக தாரணியம், கௌஷீதகி, சாந்தோக்கியம் முதலான பழைய உபநிடதங்களில் நன் கெடுத்துக்

கூறப்பட்டிருத்தலால், உபநிடத காலத்தாரியரி னின்று சிவஞானபோதச் செம் பொருள் போந்த தெனக் கிளத்தலும் இயலாதென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/283&oldid=1591618" இலிருந்து மீள்விக்கப்பட்டது