உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

257

இன்னும் இங்ஙனமே இஞ்ஞான்றை ஆராய்ச்சியாளர் பலரும் நடுநின்றாய்ந்துரைக்கும் உரையெல்லாம், ஆரியர் இவ்விந்திய நாட்டுட் புகுமுன்னர்த் தமிழ் மக்களே இவ்விந்திய தேயம் முழுதும் இதனையடுத்துள்ள பெலு சித்தானத்தும் நிறைந்திருந்து நாகரிகத்தில் மிக்கு விளங்கினரென்னும் உண்மையினை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ள விளக்குகின்றன.

இத்துணைச் சிறந்த பண்டைத் தமிழ்மக்கள் பாற் றோன்றிய சான்றோர்களே, கடவுள் உயிர் மலம் என்னும் முப் பொருட் டன்மைகளையும் உள்ளவாறாராய்ந் துணர்ந்து, அவை தம்மை உலகமெங்கணும் பரவச் செய்து வந்தனரென்பது, பழந்தமிழ் முனிவராகிய திருமூலர்,

“தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் உழிழ்வது போல உலகந் திரிவார்

அவிழும் மணமும் எம்ஆதி யறிவுந்

தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவம் ஆமே"

என்றும்

“சதாசிவந் தத்துவம் முத்தமிழ்வேதம்'

(1646)

(86)

என்றுந் தமது திருமந்திர மெய்ந்நூலின்கண் விளம்பிய வாற்றாலுந் தெற்றென விளங்காநிற்கும்.

இவையல்லாமலும், பண்டையாரியர் இறந்து பட்டதும் முன்னோர்க்கு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டுஊனுங் கள்ளும் அருந்தி வெறியாட்டு அயர்வதி லேயே முனைத்து நின்றனரன்றி ஊனுங் கள்ளும் மறுத்த அருள் ஒழுக்கத்தில் உளம் ஒருங்கி நின்று, இறைவனியல்பும் உயிர்களினியல்பும் உயிர்களைப் பிணித்த மும்மலவியல்பும் ஆழ்ந்தறிந்து, தம்மைத் தூய்மை செய்து இறைவன் றிருவடிக்கட் கனிந்துருகும் மெய்யன்பினராய் நின்றவர் அல்லர். இருக்கு எசுர் சாமம் அதர்வம் முதலான நான்கு வேதங்களிலும் ஆரியராற் பாடப்பட்ட பதிகங்களில் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ வணக்கமும் வெறியாட்டு வேள்வி யுமல்லால், வேறு சிறந்த பொருளைச் சிறிதுங் காண்டல் இயலாது; மற்று, அவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/282&oldid=1591617" இலிருந்து மீள்விக்கப்பட்டது