உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 28

இன்னும், இற்றைக்கு எண்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னமே, தமிழையுந் தமிழோடினமான ஏனைப் பதின் மூன்று மொழிகளையும் ஆழ்ந்து மிகநுண்ணிதாய் ஆராய்ந்து முடிபுகண்ட கால்டுவெல் என்னும் ஆங்கில ஆசிரியர், இவ்விந்திய நாடுகளிற் 'கோண்டர்' என்பார் பேசும் மொழியும், ஒரிசா நாட்டையடுத்த மலை நாடுகளிற் ‘கொண்டர்’ என்பார் ம வழங்கும் மொழியும், வங்காள தேயத்தில் ராஜமால் மலைகளில் உறையும் ‘மாலர்' என்பார் பேசும் மொழியும், சூடியா நாகபுரத் திலும் அதனையடுத்த நாடுகளிலும் உள்ள ‘ஓராஓனர்” என்பார் வழங்கும் மொழியும் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே யுள்ள பெலு சித்தானத்தில் உயிர் வாழும் ‘பிராகுவியர்' என்பார் பேசும் மொழியும், இமயமலைச் சாரலிலும் பிற வடநாடு களிலும் வழங்கும் பல்வேறு மொழிகளும் பண்டைத் தமிழ் மொழியின் றிரிபுகளாய் இருத்தல்கண்டு, மிகப்பழைய காலத்தே இவ்விந்தியதேயம் முழுவதூஉம் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களே யாவரென்றும், அவர் வழங்கியவை தமிழுந் தமிழின் றிரிபான மொழிகளுமே யாகுமென்றும் முடித்துச் சொல்லியிருக்கின்றார்.6

L

6

சென்று

ன்னும், அப்பழங்காலத்தே மேல்நாடு நாகரிகத்தைப் பரவச்செய்த சுமேரியர், பாபிலோனியர் முதலான மக்கட்குழுவினருந் தமிழ்மக்களே யாவரென்றும், இவர்கள் ஆரியர் வருதற்கு முன்னமே பஞ்சாப்பு சிந்து பலுசித்தான மாகாணங்களைத் தமக்கு உறைவிடமாய்க் காண்டிருந்து அங்கிருந்து மேல்நாடுகளுக்குக் காலினுங் கலத்தினுஞ் சென்று வாணிகம் நடாத்தியும் அவருள் ஓரோ வொரு கூட்டத்தார் அந்நாடுகளிற் பற்பல இடங்களிற் குடியாக ரு வைகியும் வாழ்ந்து வந்தனரென்றும், அங்ஙனம் அவர்கள் மேனாட்ட வருடன் வாணிகம் நடாத்தியஞான்று தாங் கொண்டுசென்ற தமிழ் ஓவிய எழுத்துக்களேபின்னர்ப் பாபிலோனிய தேயத்தில் முளையெழுத்துக்களின் வடிவத்தை (Cuneiform shape) எய்தினவென்றும் 'ஹால்' (Dr. H.R. Hall) என்னும் ஆசிரியர் தமக்கு முன்னமே பரந்தாழ்ந்து ஆராய்ந்து வரைந்திருத்தலை ‘மார்ஷல்' துரை மகனாரே தமது நூலுள் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/281&oldid=1591616" இலிருந்து மீள்விக்கப்பட்டது