உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

பிறநூல்களிற் கண்டு கொள்க.

255

இன்னும், இவ்விந்திய தேயத்தின் வடமேற் கெல் லைக்குள் உள்ள பஞ்சாப்பு மாகாணத்தின்கண் இருக்கும் அரப்பா, மொகிஞ்சதரோ என்னும் இரண்டு இட ங்களில் முன்னொரு கால் நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கிய இரண்டு பெரிய நகரங்கள் அழிந்துபட்ட குறிகள் தோன்றக் கண்டு, நம் ஆங்கில அரசின் பழமையாராய்ச்சிக் கழகத்தார் அவ் வி ங்களை அகழ்ந்து பார்க்க, அங்கிருந்த நகரங்களின் சிறந்த கட்டிடங் களும், அவற்றின்கண் இருந்த பண்டங்கள் கலங்கள் கோயில்கள் அக்கோயில்களிலிருந்த பல சிவலிங்க வடிவங்கள் அக்கோயிற் சுவர்களிற் பொறிக்கப்பட்ட ஓவிய எழுத்துக்கள் முதலிய பலவும் புலப்படலாயின. இவை யவ்ளவும் ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் உயிர் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு உரியவை களென்றும்; அத் தமிழ் மக்கள், இரும்பைப் பயன்படுத்தத் தெரிந்த மக்களின் பழங் காலத்திற்கும் முன்னே செம்பையும் வெண்கலத்தையுமே பயன்படுத்தத் தெரிந்த அத்துணைப் பழைய காலத்தே யிருந்தவ ரென்றும்; அப் பண்டைத் தமிழ் மக்கள் வணங்கிய சிவலிங்க வடிவங்கள் அவ்விடங்களில் ஏராளமாய்ப் புதைக்கப்பட்டிருந்த தனை உற்றுநோக்குங்கால் அவர்க் குரிய சைவ சமயமானது உலகத்தின்கண் மிகத்தொன்று தொட்ட காலத்தே யிருந்து இன்றுகாறும் அழியாது நிலவுந் தனிப்பெருஞ் சிறப்புவாய்ந்தது என்னும் உண்மை நன்கு விளங்கா நிற்கின்ற தென்றும் அக்கழகத் தலைவரான சர்ஜான் மார்ஷல் என்னும் ஆங்கிலத்துரை மகனார் நுண்ணிதின் ஆராய்ந்து விளக்கி யெழுதியிருக்கின்றார்.5 மறுக்கல் ஏலாத மெய்ச்சான்றுகள் கொண்டு இவ்வாங்கிலத் துரைமகனார் நடுநின்று நுவலும் மெய்யுரையாற் சைவ சமயமும் அதனைத் தழுவிய தமிழ் மக்களும், இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பே யிருந்து ஆரியர் இதனுள் வந்து நுழைதற்கு முன்னரேயே, இதன் மேற்கெல்லை வரையிற் பரவியிருந்தது மன்றி, அப் பழந்தமிழ் மக்கள் அப் பண்டை நாளிலேயே நாடுநகரங்கள் வகுத்துஞ் சிவலிங்க வடிவங்கள் நிறுவிய சிவபிரான் றிருக் கோயில்கள் பற்பல அமைத்தும், நாகரிகத்தில் மிகச் சிறந்தாராய்த் திகழ்ந்தன ரென்னும் வாய்மையும் நன்கு புலனாகின்ற தன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/280&oldid=1591615" இலிருந்து மீள்விக்கப்பட்டது