உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் - 28

எனவே, சிவஞானபோதத்திற்குப் பாயிரச் செய்யுள் பாடியவர், அத்தகையதோர் அரியநூல் அஞ்ஞான்று வடமொழியில் ல்லாமையானும், மெய் கண்ட தேவர் தமது அளப்பரு மதியால் ஆராய்ந்து அரும்பொருட் பரப்பெல்லாம் அடக்கிச் செய்த அந்நூலை மொழிபெயர்ப்பு நூலென்று பொய்யுரை கூறத்துணியாராய், அதுகூறத் துணியாராயினும் அது வடநாட்டு முனிவர் வழியில் வந்ததெனக் கூறுவதில் மட்டும் வேட்கை பெரி துடையராய் “நந்தி முனிகணத் தளித்த உயர் சிவஞான போதம்” என்னும் அவ்வளவே கூறிப்போயி னார். இவ் வாற்றாற், சிவஞான போதப் பாயிரச் செய்யுளிலுஞ் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலென்றற்கு ஏதொரு குறிப்புங் காணப்படாமை கண்டுகொள்க.

அற்றன்று, “நந்திமுனிகணத்தளித்த சிவஞான போதம்' என்று கூறப்பட்டதுகொண்டே, நந்திதேவர் அருளிச்செய்த சிவஞானபோதம் வடமொழியில் இயற்றப்பட்ட தொன் றாகல் வேண்டுமென்பது பெறப்படும். என்னை? நந்திதேவர் வழங்கியது வடமொழியே யல்லது தமிழ்மொழி அன்றா கலான் எனின்; நந்திதேவர் வடமொழியேயன்றித் தமிழ் வழங்கவில்லை யென்பது யாங்ஙனங் கண்டீர்? வடமொழிப் புராணங்கள் உரைப்பக் கண்டா மெனின், வடமொழியார் அவர் வடமொழி பேசினர் என்ப; தமிழ்மொழியார் அவர் தமிழ் பேசின ரென்ப; உண்மை காண்பவர் அவர் வழங்கியது தமிழே யன்றி வடமொழி அன்றென முடிவு கூறுவர். ஏனெனில், அதனை ஒருசிறிது விளக்குதும்.

வடமொழி வழங்கிய ஆரியர் இவ்விந்திய நாட்டுட்புகு முன்னரே, இதன் வடக்கேயுள்ள பனி (இமய) மலை ல தொடுத்துத் தெற்கேயுள்ள குமரிவரையிலுங், கிழக்கே வங்க நாட்டிலிருந்து மேற்கே பெலுசித்தானம் வரையிலும் பேசப்பட்ட மொழி தமிழேயாகும். இது தமிழ் வழங்கிய மாந்தரைத் ‘தஸ்யுக்கள்' என்றழைத்து அவருடன் போ ராடிய பண்டை ஆரியர் பாடிய இருக்கு வேதப்பாட்டுகளால் நன்கு புலனாகின்றது. இதன் விரிவை 'மாணிக்கவாசகர் காலம்’ ‘பண்டைத்தமிழர் ஆரியர்’, ‘முற்கால பிற்காலத் தமிழ்ப்பு லவர்’, வேளாளர் நாகரிகம்' முதலான எம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/279&oldid=1591614" இலிருந்து மீள்விக்கப்பட்டது