உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

253

அவர்செய்த சிவஞானபோத நூலை மொழி பெயர்ப்பு நூலென்று நுவலுதற்கு அதனுள் அகச்சான்று ஏதுமில்லை யென்பது கருத்திற் பதிக்கற்பாற்று.

யரான

இனிப், புறச்சான்றாயினும் உளதோவெனின், அதுவும் லையென்பது காட்டுவாம். சிவஞானபோதத்திற்குப் பாயிரச்செய்யுள் எழுதிச் சேர்க்கப்பட்ட காலம், அந்நூலா சிரி மெய்கண்டதேவர் சிவபிரான் றிருவடி நீழல் எய்தியதற்குப் பிற்பட்டதாகும் என்பது ஆராய்ச்சியாற் புலனா கின்றது. அப்பாயிரச் செய்யுள் இயற்றினார் இன்னாரென்பது விளங்காவிடினும், அவர் மெய்கண்ட தேவரின் ஆசிரியரை நந்திதேவரின் மாணவரில் ஒருவராக உரைத்தல் கொண்டு, அந்நூற் சிறப்புக்கு அவர் நந்திதேவரின் றொடர்பை நாட்டல் வேண்டினாரென்பது மட்டுந் தெற் றென விளங்கா நிற்கின்றது. எனவே, தென்னாட்டின்கட் செய்யப்பட்ட சிறந்த தமிழ்நூற் பொருள்கள்,வடநாட்டின் கண் இருந்த முனிவரிலிருந்து வந்தன வெனக் கூறுதலை ஒரு பெருமையாக் கொண்டவர் அப்பாயிரம் ஆக்கியோ ரென்பதூஉம், அதனால் மெய்கண்ட தேவர்க்குப் பின்னர்த் தான் வடநாட்டு முனிவர்க்கே எல்லா ஏற்றமுஞ் சொல்லும் ஒரு பிழைபாடான கொள்கை இந்நாட்டின்கட் பரவத் துவங்கலாயின தென்பதூஉம் அதனிலிருந்து உய்த் துணரக் கிடக்கின்றன. இத்தகைய பிழைபாடு அப்போதுதான் பரவத் துவங்கியதன்றி அஃது இன்னும் வேர் ஊன்றாமையால், அப்பாயிரம் உரைத்தவர், சிவஞானபோதம் நந்திதேவர் வழியில் மெய்கண்ட தேவர்க்கு வந்ததென மொழிந்தனரே யல்லால், அது நந்திதேவரால் வடமொழியிற் செய்யப் பட்டிருப்ப அதனை மெய்கண்டதேவர் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தாரெனப் பின்னும்

ஒரு பொய் கூறத்

துணிந்திலர். அன்றி அவர் துணிந்து அப்பொய் கூறினுந், தமிழ் வல்லார் தொகை மலிந்த அந்நாளில் ‘வடமொழிச் சிவஞான போதத்தைப் பல இடங்களிலிருந்துஞ் சுவடி களாக வருவித்துக் காட்டுக' என்று அறிஞர் பலருங் கேட்ப ராகலானும், முயற் கொம்புபோல் இல்லாத தான வட மொழிச் சிவஞான போதத்தை அவர் அங்ஙனம் பலஊர் களிலிருந்தும் பல ஏடுகளாக வருவித்துக் காட்டல் இயலாதா கலானும் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/278&oldid=1591613" இலிருந்து மீள்விக்கப்பட்டது