உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

-

மறைமலையம் - 28

ரெனக் கூறுவதே பற்றி, இந்நூல் வரலாற்றி னை நடுநின்று ஆராய்ந்து காண மாட்டாத தமிழ்ப்புலவர் சிலர் சிவஞான போதத்தை மொழிபெயர்ப்பு நூலென்றே நம்பிச் சொல்வதிற் பழகி விட்டார். சிவஞான போதம் மெய்கண்ட தேவரால் முதன் முதற் செய்யப்பட்ட தமிழ் நூலாகுமே யன்றி, அது வட மொழியினின்றும் மொழிபெயர்த்துச் செய்யப் பட்ட மொழி பெயர்ப்பு நூலாகாது என்பதனை இற்றைக்கு நாற்பதாண்டு களுக்கு முன்னமே சித்தாந்த தீபிகை என்னும் உண்மை விளக்கத் திங்கள் வெளியீட்டின்கண்யாம் அந்நாளிற் சிவஞான சித்தியார் அளவையியலுக்கு வரைந்து வெளியிடு வித்த உரையின்கண் முதன்முதல் எடுத்துக் காட்டினேம். அதற்குப் பின், எமது ஞான சாகரம் என்னும் அறிவுக்கடல் வெளியீட்டின் மூன்றாம் மலரிலுஞ் சிவஞானபோதம் என்னுந் தலைப்பின்கீழ் அது மொழிபெயர்ப்பு நூலாத லின்றித் தமிழிலேயே ஆக்கப்பட்ட நூலாதற்கு வலிய சான்றுகள் பலவுமெடுத்துக் காட்டி விளக்கினோம். அதன் பின்னும், எமது மாணிக்கவாசகர் காலம் என்னும் பெரு நூலிற் சிவஞான போதம் மெய்கண்ட தேவரால் முதன்முதற் றமிழில் இயற்றப் பட்ட அறிவு நூலாதலும், வடமொழிச் சிவஞானபோதமே, தமிழ்ச் சிவஞானபோதத்தைப் பார்த்துச் செய்த மொழி பெயர்ப்பு நூலாதலும் நன்கு விளங்கப் பல சிறந்த சான்றுகள் காட்டி நிறுவினாம். இங்கும் அதுபற்றி இன்னுஞ் சில கூறுதும்.

L

மெய்கண்டதேவர் தமது

சிவஞானபோதத்தை

வடமொழி யிலிருந்து மொழி பெயர்த்துச் செய்தனராயின், அதற்குத் தாம் அசையடக்கங் கூறியிரார். அற்றன்று, தாஞ்செய்த மொழி பெயர்ப்புக்கே அவையடக்கங் கூறினா ரெனிற், கம்பருங் கச்சியப்பரும் முறையே இராமாயணமுங் கந்தபுராணமும் வடமொழியைப் பார்த்துத் தாஞ் செய்தமை கிளந்து தாஞ்செய் மொழிபெயர்ப்பிற் காணப்படுங் குறைகளைப் பொறுக்குமாறு அவையத்தாரை வேண்டி னாற் போல, மெய்கண்டதேவரும் வடநூலிருந்து தமது நூலை மொழிபெயர்த்துச் செய்தன ராயின் அதனைக் கிளந்து கூறியிருப்பர். மற்று அவர் அவ்வாறு குறிப்பா லாயினும் வெளிப்படையாலாயினும் ஒருசிறிதுங் கூறா மையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/277&oldid=1591612" இலிருந்து மீள்விக்கப்பட்டது