உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து

சிவஞான போத ஆராய்ச்சி

251

ணியப்படவே, 'மெய்கண்டதேவர் அருளிச் செய்த சிவஞானபோதச் செம்பொருணூல் முதலிலிருந்து முடிவு வரையில் தூய தமிழ் நூலேயாதலுந் தானே பெறப்படும். இது முழுதுந் தாமே ஆக்கிய நூலாதல் பற்றியன்றே மெய்கண்ட தேவர்.

66

"தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்

எம்மை யுடைமை எமையிகழார்--தம்மை யுணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்.'

என அதற்கு அவையடக்கச் செய்யுளுந் தாமே கூறியுள்ளார். மற்று, இது தம்மால் ஆக்கப்படாமற் பன்னிரண்டு சூத்திர வடிவாய் முன்னமே தமிழில் யாக்கப் பட்டிருக்கத் தாம் அதனையெடுத்து, ஒவ்வொரு சூத்திரப் பொருளையும் பல அதிகரணங்களாக வகுத்து, ஒவ்வோர் அதிகரணத்தும் உரைநடையில் வார்த்திகப் பொழிப்புஞ் செய்யுள் நடையில் எடுத்துக்காட்டு வெண்பாக்களும் ஆகிய இவை மட்டுமே சேர்த்து, அதனைப் பெருக்கி ஒரு நூலாக்கி வைத்தனராயின், தம்முடைய வல்லாச் சூத்திரப்பொருளை அங்ஙனந் தம்முடைய வாக்கி அதற்கு அவர் அவையடக்கமுங் கூறுதல் ஆகாதன்றே? தாஞ்செய் நூலாயினன்றே அதன்கட் போந்த பிழைகளைப் பொறுக்கும்படி வேண்டி அவையத்தார்க்குத் தாம் அடங்கிக் கூறுதல் அமையும். இருந்தவாற்றாற், சிவஞான போத நூற்பா பன்னிரண்டும் முன்னமே தமிழில் ஆக்கி வைக்கப்பட்டிருந்த சான்றேதுமின்றிக் கரைவார் கூற்றுச் சிறிதும்

தனச்

பொருந்தாதென்க.

இனிச், சிவஞானபோதத்திற்கு முதன்முதல் உரை யெழுதிய பாண்டிப்பெருமாள் முதல், அவர்க்குப்பின் உரை வகுத்த சிவஞான முனிவர் ஈறாக வந்த உரைகாரரெல்லாரும், வட மொழி இரௌரவாகமத் திறுதியிற் பாச விமோசனப் படலத்தின்கட் பன்னிரு சூத்திர வடிவினதாய் இருந்த வடமொழிச் சிவஞானபோதத்தையே மெய்கண்டதேவர் தமிழில் மொழிபெயர்த்து, வார்த்திகப் பொழிப்பும் எடுத்துக் காட்டு வெண்பாக்களுந் தாம் புதியவாக இயற்றிச் சேர்த்திட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/276&oldid=1591611" இலிருந்து மீள்விக்கப்பட்டது