உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

  • மறைமலையம் - 28

காலத்தே உண்டாய் விட்டமை தெளியக் கிடக்கின்றது.

இனி, சிவப்பிரகாசர் காலத்திலோ, நந்தி முனிவர் குழாத்துக்கு அருளிச் செய்த சிவஞானபோதப் பொருளை அக்குழாத்துள் ஒருவர் ‘சத்தியஞானதரிசனி'களுக்கு அருளிச் செய்ய, அவர் பரஞ்சோதி முனிகளுக்கு அருளிச் செய்ய, அவர் மெய்கண்ட தேவர்க்கு அருளிச் செய்ய, மெய்கண்டதேவர் அதனை ஒரு நூலாகச் செய்தருளினா ரென முன் இல்லாத வேறிரண்டு குறிப்புகள் பதியவாய்ப் கிளைத்துவிட்ட ன. சிவஞான போதப் பாயிரத்தில் நுவலப் படாத இறைவனையுஞ் சனற் குமாரரையும் அருணந்தியார் யாங்ஙனங் கண்டனரோ அதற்குச் சான்றேதுங் கண்டிலம். இன்னுஞ், சிவஞானசித்திப் பாயிரத்திற் காணப்படாத சத்தியஞான தரிசனிகளையும் பரஞ்சோதி முனிவரையும் உமாபதிசிவனார் யாங்ஙனங் கண்டனரோ அதற்குஞ் சான்றேதுங் காண்கிலம்.

இனிச், சிவஞான போத நூலாசிரியராகிய மெய்கண்ட தேவரோ, தாம் இயற்றிய அந்நூற்பொருளை, இறைவன் நந்திதேவர்க்கு இயம்பின னெனவாதால், நந்திதேவர் அதனை முனிவர் குழுவிற்கு அறிவுறுத்தன ரெனவாதல் தமது சிவஞான போத நூலுள் ஓரிடத்தாயினுங் குறிப்பிட்டிலர். அவர் குறிப்பிட்டவெல்லாம்: “அந்தம் ஆதி என்மனார் புலவர்” என முதற் சூத்திரத்திறுதியிலும், "இரண்டுவகையின் இசைக்குமன் உலகே" என ஆறாஞ் சூத்திரத்திறுதியிலும் மொழிந்தவை களேயாம். தாம் முடித்துக்கூறும் இச்சைவசித்தாந்தப் பொருள்கள் தமக்கு முன்னிருந்த ஆசிரியர்களாற் கூறப்பட்டன வாகும் என்பதே அச்சொற்றொடர்ப் பொருளாதல் தெற்றென விளங்கா நிற்கும். இதனால் மெய்கண்டதேவர் தமது சிவஞானபோத நூலுட் பலவாற்றானும் ஆராய்ந்து முடித்த முடிபுகள், தமக்கு முன் இமயம் முதற் பொதியம் ஈறாக விரிந்த தமிழ் நாட்டகத்திருந்த சான்றோர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுகளேயாதலை விளங்கத் தெரித்தாராயினர். ஆகவே, தமிழ்ச்சான்றோர் கடவுள் உயிர் மலம் என்னும் முப்பொருட் டன்மைகளைத் தீர ஆராய்ந்து தெளித்த உண்மைகளையே, மெய்கண்டதேவர் பின்னும் ஆராய்ந்து முறைப்படுத்தித் தந்நூலிற் பொதிந்து வைத்தாரென்பது நன்கு துணியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/275&oldid=1591610" இலிருந்து மீள்விக்கப்பட்டது