உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

249

இனி, அவையிற்றைப் பயின்று தெளிந்த உமாபதி சிவனார், அவை யிரண்டற்குஞ் சார்பு நூலாகச் 'சிவப் பிரகாசம்' எனப் பெயரிய அறிவு நூலை இயற்றியருளினார். இவர் இந்நூலை இயற்றுகின்ற காலத்திற், சிவஞான போத நூல் வந்த வரலாற் றினுக்கு இன்னும் இரு வட நாட்டு முனிவர்கள் காரணராகப் புனைந்து கட்டிச் சொல்லப் படுவாராயினர். அது, சிவப் பிரகாசப் பாயிரத்திற் போந்த, "தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட

திருநந்தி அவர்கணத்தோர் வெல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணெய் மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா

விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத் தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவர்இச்

சந்தானத் தெமையாளுந் தன்மை யாரே,’”

என்னுஞ் செய்யுளால் நன்கறியப்படும். இதன் கண் நந்திதேவர் முதலாசிரியரும், நந்தி தேவரின் மாணவரான முனிவரில் ஒருவர் இரண்டாம் ஆசிரியரும், அவர்க்குப்பின் சத்தியஞான தரிசனிகள் என்பார் மூன்றாம் ஆசிரியரும், அவர்க்குப்பின் பரஞ்சோதி மாமுனிகள் நாலாம் ஆசிரியரும், அவர்க்குப் பின் மெய் கண்டதேவர் ஐந்தாம் ஆசிரியருமாக நுவலப் பட்டமை

காண்க.

மேலே காட்டியவாறு, நந்திதேவர் முனிவர் கூட்டத் திற்கு அருளிச் செய்த 'சிவஞானபோத'ப் பொருளை அம் முனிவரில் ஒருவர் மெய்கண்டதேவர்க்கு அறிவுறுத்த, மெய்கண்ட தேவர் அதனை ஒரு செம் பொருணூலாக இயற்றியருளினார் என்னும் அவ்வளவே சிவஞானபோதப் பாயிரச் செய்யுள் உரையா நிற்பச், சிவஞான சித்திப் பாயிரச் செய்யுளோ இறைவன் அதனை நந்தியெம்பெருமானுக்கு அறிவுறுத்த, நந்தியெம் பெருமான் அதனைச் சனற் குமாரர்க்கு அறிவுறுத்த,

மெய்கண்டதேவர் அதனை ஒரு நூல் வடிவிற் செய்தருளினா ரெனப் புகலா நின்றது. எனவே, மெய்கண்ட தேவர் காலத்தில் வழங்காத இரண்டு செய்திகள் புதியவாகச் சிவஞானசித்தியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/274&oldid=1591609" இலிருந்து மீள்விக்கப்பட்டது