உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் 28

களிற்றுப்படியார்” என்னும் இரு நூல்களுடன் மெய்கண்ட தேவரும் அவர்தம் மாணவரும், அவர்தம் மாணவரின் மாணவரும் அருளிச்செய்த நூல்கள் பன்னி ரண்டுஞ் சேர்த்துச், சைவ சித்தாந்த நூல்கள் பதினான் கன்று சென்ற அறுநூறாண்டுகளாக வழங்கி வருகின்றனர்.

முழுமுதற்கடவுள் உண்மை

ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனரால் அறிவா ராய்ச்சிப் பொருளெல்லாம் நன்கினிது நன்கினிது விளங்கப் பன்னி ரண்டு சூத்திரங்களிலே செறித்து அருளிச் செய்யப்பட்ட சிவஞான போதநூல் உரையிடற்காகா அருமை பெருமை யுடைத்தாய்த் திகழும் வாய்மை முன்னமே காட்டப்பட்டது. இது தன்னைத் துறை போகக் கற்றாராய்ந்து தெளிந்தார் எல்லா நூற்பொருளும் ஒருங்குணர்ந்தாராய் மெய்ப் பொருளுறுதி கூடி முதல்வன் றிருவடிப் பேற்றினைத் தலைப்படுவரென்பது துணிபாமாகலின், இதன் சூத்திரப் பொருளை முறையே ஆராயப் புகுந்து, முதற்கண் முதற் சூத்திரத் தான் ஆராய்ந்து நிறுவப்படும் முழுமுதற் கடவுளுண்மையினை எடுதது விளக்குவாம்:

66

அவனென்றும் அவளென்றும் அதுவென்றுஞ் சுட்டி யுரைக்கப்படும் அவ்வமைப்புகள் ஒருகாற் றோன்றிச் சிலகால் நிலவிப் பின்னொரு கால் அழிதலாகிய மூன்று தொழில்களின் வாய்பட்டனவாய் நடைபெறக் காண்டலின், அவ்வமைப்புகள் தாமாகவே தோன்றியனவாகாமற், பிறிதோர் அறிவுப் பொரு ளாற் றோற்றுவிக்கப்பட்ட உள் பொருள்களேயாம்; அவை சிலகாற் சென்றபின் அழிந்து மறையினும் அவற்றின்கண் உள்ள வாலாமை நீங்காமையின், அது நீங்குங்காறும் அவை மீளமீளத் தோன்றா நிற்கும்; தோற்றுவித்த அவ்வமைப்புகளை அழிக்கும் எல்லாம்வல்ல அறிவுப்பொருளே அவ் வமைப்பு களுக்கு முன்னுமுள்ள முதற்பொருளாகுமென்று அறியற் பாற்று என்பதே முதற்சூத்திரப் பொருளாகும்.

தன்கட், சுட்டியறியத்தக்க அமைப்புகளை ஆராயு முகத் தானன்றிச் சுட்டியாராய்தற்கு இயலாத பொருளு ணர்ச்சி கொண்டு முழுமுதற் கடவுளிருப்பினைத் துணிதல் செல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/291&oldid=1591627" இலிருந்து மீள்விக்கப்பட்டது