உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

267

தென்பது முதற்கண் அறிவுறுத்தப்படுகின்றது. மெய், வாய், கண், மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளின் வாயிலாக நாம் உணரும் பொருள்கள் அத்தனையுஞ் சிற்றளவு வாய்ந்த சிறுபொருள்களே யல்லாமற் பேரளவு வாய்ந்த பெரும் பொருள்கள் அல்ல. ஒன்றையொன்று நோக்கச் சிறுமை பெருமையுடையனவாக வழங்கப்படினும், நம்புலன்களால் அறியப்படும் பொருள்களெல்லாம் நம்மாற் சுட்டியறிப்படுஞ் சிறுமையுடையனவேயாம். நம் புலன்களாற் கவரப்படாத சாலப் பெரியபொருளின் அமைப்பு நம்மால் ஒரு சிறிதும் அறியப்படா தன்றுணர்தல் வேண்டும். இம் மண்ணுலகிற் றோன்றும் பொருள்கள் அத்துணையும் நம்முடம்பின் உறுப்புகளாற் றொடப்படுவனவாயும், அவற்றுட் சில பல நாவாற் சுவைக்கப்படு வனவாயும். மற்றுஞ் சில மூக்கால் மோக்கப்டு வனவாயும் இன்னும் பல கண்ணாற் காணப்படுவனவாயும் ருக்கின்றன. இவற்றுள்ளும், நாவாலும் மூக்காலும் நுகரப் படுவன அளவில் மிகச் சிறியனவேயாம்; உடம்பினுறுப்புகளாற் றொடப்படுவனவோ சிறியனவும் பெரியனவுமாயிருப்பினும், ஒருகாலத் தோரிடத்து ஓர் உறுப்பாற்றொடப்படுவது ஒரு பொருளின் மிகச் சிறுபகுதியேயாம்; என்றுணர்தல் வேண்டும். ஒரு பெருமலை அளவிற் பெரியதேயாயினும், அதனை நங் கைகள் தொட்டுணரக்கூடியவேயாயினும், ஒரே காலத்தில் அவை அம் மலையின் பேரளவினையெல்லாந் தொட்டுணர வல்லன அல்ல, அதன் மிகச் சிறிய ஒரு பகுதியினையே அவைதொட்டுணரவல்லன வாகும். அங்ஙனமே,

நங்

கண்களானவை சிறியவும் பெரியவுமாய் பலபொருள் களையும் பார்க்கவல்லனவேனும், ஒரு காலத்தோரிடத் திருந்து அவை உற்றுப்பார்க்க இயைந்த ஒரு பொருட்பகுதி ஓர் ஊசி நுனியின் அளவினதேயாம்; பரந்த நோக்கமாய்ப் பெரும்பொருள் களைப் பார்ப்பினும், அப்பார்வைதானும் அப்பொருட் பரப்பெல்லாம் ஒருங்கே கவரவல்லதன்று; நங் கட் பார்வைக்குக் கடலின் ஒரு பெரும் பரப்புப் புலனாவ தேயா யினும் அக் கடலின் முழுப் பரப்பும் முடிந்த வெல்லையும் அது தனக்குப் புலனாவதில்லை யன்றோ? ஆகவே சுட்டியறியப் படும் பொருள்கள் அத் துணையுஞ் சிற்றளவினவேயா மென்பதூஉம், பொது நோக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/292&oldid=1591628" இலிருந்து மீள்விக்கப்பட்டது