உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் 28

காய்ப் பரந்தறியப்படும் மலை கடல் நிலம் முதலியன தாமுஞ் சுட்டியறியப் படுங்காற் பகுக்கப்படுஞ் சிறுசிறு கூறுகளை யுடையனவேயா மென்பதூஉந் தெற்றெனப் பெறப்படுதல்

காண்க.

இனிச் சுட்டியறிதற்கு ஒருவாற்றானும் ஒருவாற்றானும் இயலாத வான்வெளியினியல்புஞ் செயலும் நம்மனோர் உணர்வுக்குத் தினைத்தனையும் புலனாகாமையின், அதனை யொழித்து, அவன் அவள் அதுவெனச் சுட்டியறியப்படும் பொருளு ணர்வு கொண்டே முழுமுதற் கடவுளின் இருப்புஞ் செயலும் இலக்க ணமுந் தேர்ந்துணரப்படும் என்று ஆசிரியர் மெய் கண்ட தேவநாயனார் கூறிய நுட்பம் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும். என்னை? மக்களறிவாற் சுட்டி யுணரப்படுஞ் சிறுசிறு கூறுகளின் தொகுதியாய் அமைந்த இப் பொருள் க ளல்லாம் அங்ஙனஞ் சிறுசிறு கூறுக ளாகய்ப் பகுக்கப்படு தற்குங் கூட்டப்படுதற்கும், அப் பகுத்தற் றொழிலையுங் கூட்டற் றொழிலையும் இடையறாது புரியும் ஓரறிவுப்பொருளின் செயலை இன்றியமையாது அவாவி நிற்றலான் என்க.

னி, மக்களாற் சுட்டியறியப்படும் பொருள்களுள்ளும் உயிருள்ளனவும் உயிரில்லனவும் என இரு வேறு பகுப்புகள் காணப்படுகின்றன. உயிரில்லாத கல் மண் நீர் முதலான பொருள்களை ஆராய்தல் கொண்டு கடவுளின் இருப்பையுஞ் செயலையும் ஐயமின்றித் தெளிதல் இயலாமையின், அவற்றின் றொகுதியான இந் நிலவுலகினை முற்கூறுத லொழிந்து, உயிருடைய ஆண் பெண்ணமைப்பினை ஆசிரியர் முதற்கட் கூறிய திறம் பெரிதும் வியக்கற்பாலதா யிருக்கின்றது. என்னை? உயிரில்லாத கல் மண் முதலிய வற்றின் அமைப்பு, அவற்றின் அணுக்கள் ஒன்றை யொன்றீர்த்துக் கூடுங் கூட்டத்தானும் இயற்கையே நிகழவும் பெறும். அங்ஙனமே அவ்வணுக்கள் நாட் செல்லச் செல்லத் தம் ஈர்க்கும் ஆற்றலிழந்து, ஒன்றையொன்று விட்டுப் பிரிதலால் அவ்வமைப்பு அழியவும் பெறும்; ஆகவே, அணுக்களின் இயற்கைத் தன்மையால் நிகழும் இக்கூடல் பிரிதல்களாகிய இருவகைத் தொழில் களையும் நிகழ்த்துதற்கு இறைவனொருவன் வேண்டுமென்று ரைப்பது மிகுதியாய் முடியுமாகலின் என்பது. மற்று உயிருள்ள ஆண் பெண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/293&oldid=1591629" இலிருந்து மீள்விக்கப்பட்டது